பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-9-

எணுக்குள்‌ தங்கள்‌ உடலையும்‌, மொழிக்குள்‌ தங்கள்‌ உணவுகளையும்‌ புதைத்து வைத்துவிட்டுப்‌ போயிருக்‌ கின்றனர்‌. எனவே மொழியுள்‌ பழைய மாந்தரைப்‌ புதிய மாந்தர்‌ இனங்‌ கண்டு கொள்கின்றனர்‌; புதிய மாந்தரைப்‌ பழைய மாந்தர்‌ வடிவமைக்கின்றனர்‌.

2: 9: மாந்தன்‌ இறந்துபடுகின்றான்‌; மொழி இறந்து படுவதில்லை. இறந்து போன மொழிகள்‌ அணைந்து போன விளக்குகள்‌; நிலத்துள்‌ புதையுண்ட விதைகள்‌, விளக்குகள்‌ என்றேனும்‌ கொளுத்தப்‌ பெறலாம்‌; விதைகள்‌ என்றேனும்‌ முளைத்து வரலாம்‌. [1]

2 : 10: தொகுப்பாகச்‌ சொன்னால்‌, மக்கள்‌ இனத்தின்‌ ஒட்டுமொத்தமான மனமே மொழி. ஒரு தனிப்பட்ட இனத்தின்‌ காலம்‌, இடம்‌, பொருள்‌ ஆகியவற்றின்‌ பருமானங்களை அதன்‌ மொழியில்‌ காணலாம்‌.[2]

2: 11: இங்குக்‌ கூறப்பெற்ற மொழியின்‌ அளவை நிலைகளால்‌ அது மாந்தவினத்திற்கு எத்துணை இன்றியமை யாத உறுப்பு என்பதை விளங்கிக்‌ கொள்ளலாம்‌.

3:0 தமிழ்மொழியின்‌ தனித்தன்மை:

3: 1: மொழிக்குள்ள சிறப்பியல்கள்‌ அத்தனையும்‌ விளங்கித்‌ தோன்றும்‌ முழுவளர்ச்சியுற்ற, உலகின்‌ சில மொழிகளில்‌, தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்‌. இதன்‌ தனித்தன்மை ஓர்‌ இனத்தின்‌ தனிவரலாற்றையே உள்ளடக்கியதுடன்‌, உலக மொழிக்‌ குடும்பத்தின்‌ பரந்துபட்ட

தன்மைக்கே ஒரு மூல ஊற்றாக விளங்குகின்றது. இது


  1. சமசுக்கிருதம்‌, கிரேக்கம்‌, ஈப்ரு முதலிய மொழிகள்‌ மீண்டும்‌ புதுக்கப்‌ பெறுவதைக்‌ காண்க.
  2. பஃறுளி, கடாரம்‌, துகி - இச்‌ சொற்களில்‌ காலம்‌, இடம்‌. பொருள்‌ ஆகியவை அடங்கியிருப்பதை அறிக.