பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-15- 7: 3: ஒரு மொழி வளர்ச்சிக்குள்ள தடைகள் அனைத் திலும் மொழிக்கலப்பால் நேர்கின்ற மொழிச் சிதைவே தலையாய தடையாகும். மொழிக்கலப்பு, மொழியை வளரச் செய்யும் என்பது, வந்து கலக்கின்ற மொழியையும் அக்கலப்பை ஏற்றுக் கொள்கின்ற மொழியின் தன்மையையும் பொறுத்ததாகும். ஆங்கிலத்துள் சாக்சானியம், இலத்தீனம், கிரேக்கம், பிரஞ்சியம், இசுப்பானியம், நார்வேனியம், அசீரியம், தியுத்தானியம், ஈப்ரு, கெல்திக், பிரெசியன், ஆப்பிரிக்கன். செருமானியம் கோதியம், அங்கேரியம், அரேபியம், சிலாவனியம், ஐசுரி, உரோமானியம், பல்கேரியம், போர்த்துக்கீசியம், சமசுக்கிருதம், திரவிடம், துருக்கியம், சீனம், உருசியம், டேனியம், அக்கேடியம், பின்னியம் முதலிய பல மொழிகள் கலந்ததாலேயே அது வளர்ச்சியுற்றுப் பரவலாக வழங்குகின்றது. இன்று உலகில் ஆங்கிலத்தைத் தங்கள் தாய்மொழி போல் கருதிப் பேசும் மக்கள் ஏறத்தாழ முப்பது கோடிப் பேர் ஆகும். சீனத்திற்கு அடுத்தபடி மிகுந்த மக்களால் பேசப்படும் மொழி அது.

8. 0: இனத்திரிபும் மொழித்திரிபும் :

8: 1 ஆங்கிலம் போலும் ஒரு மொழி தன்னை அறவே இழந்துவிட்ட நிலையில் உலகில் எங்கும் இல்லை. அதற்கு அதுவே சிறப்பான நிலை என்று சொல்லும்படி அஃது இருக்கிறது. ஆங்கிலம் தன் பெயரைக் காப்பதற்குக் கூடப் போதுமான அளவில் அதற்குரிய மொழிச் சொற்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அறிந்தால், அது மொழிக்கலப்பால்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளல் வேண்டும். ஆனால் தமிழ்மொழிக்கு நேர்ந்த மொழிக் கலப்பு அதன் மொழியைத் தூய்மையிழக்கச் செய்ததோடன்றி, அதனை இழிவடையவும் செய்தது.