பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9: 1: இனி மொழிக் கலப்பைப் போன்றதே ஒலிக் கலப்பும். ஒரு மொழியோடு வேறுமொழி வந்து கலக்கும் பொழுது, பின் மொழியிலுள்ள சொற்களைப் பலுக்கு வதன் பொருட்டு, அதன் ஒலிக் குறியீடுகளை முன்மொழி யிலும் புகுத்தி வழங்கி வருவதே ஒலிக் கலப்பாகும். இவ் வொலிக் கலப்பு முன்மொழியிலுள்ள இயல்பான சொற்கள் சிலவற்றைக்கூட மாறி வழங்கச் செய்து விடும் (pரகம், ஜீனி, ஜவுளி முதலிய சொற்களைக் கவனிக்க). எனவே இவ் விருவகைக் கலப்பு நிலைகளும் ஒரு மொழியின் இயல்பான வளர்ச்சியைப் பெரிதும் கெடுத்து விடும். தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில். இவ்வொலிக் கலப்பும், மொழிக்கலப்பும் அதன் வளர்ச்சியைப் பெரிதும் தாக்கியொடுக்கியே வந்துள்ளன. இவ்விரு கலப்பு நிலைகளும் அறவே இல்லா திருந்த காலத்தில் தமிழ்மொழி வளர்ச்சி தன்னிகரற்று விளங்கியிருந்ததும், அதன் அடிப்படையில் அமைந்த இலக் கிய வளர்ச்சியும் அதற்குத் தக மிகச் சிறந்திருந்ததும், அக் கலப்பு நிலைக ள வளர வளர மொழி வளர்ச்சியிலும், இலக்கிய வளர்ச்சியிலும் ஒருவகைத் தேக்கம் ஏற்பட்டதும், இன்னுஞ் சொன்னுல், ஆக்கம் மிகுவாகக் குறைந்து போன துமே மேற்கூறிய கூற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டு களாகும். - - .

0: மொழியும் இலக்கியமும்:

10: 1: எண்ணமே மொழியாக வெளிப்படுவதால், மொழியே இலக்கியத்திற்கு விளைநிலமாகும். விதை எத் துணை உயர்ந்ததாக விருப்பினும், நிலமில்லாமல் அதை விதைத்தலும் வேளாண்மை செய்தலும் இயலாது போலவே எண்ணம் எத்துணைச் சிறந்ததாக விருப்பினும் மொழியின்றி இலக்கிய வேளாண்மையும் நடவாது என்க. இனி, மொழி பின்றி எண்ணமும் தோன்ருதுபோகும். பேச்சு நிலையற்ற குழந்தை எண்ணத்திலும் விளக்கமுரு திருப்பதும், பேச்சு விளங்க விளங்க எண்ணமும் வலுப்பெற்று வளர்வதும், அப் படியே