பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-23-


கடமையாகினறது. ஓர் ஆற்று நீரை எவனும்‌ அள்ளிக்குடிக்கலாம்‌. அதை அவன்‌ மாசுபடுத்துதல்‌ கூடாது. அவ்வாறு அவன்‌ தன்‌ தனிறிலை உரிமையால்‌, பொது நிலைக்குத்‌ தகாகத முறையில்‌ ஊறுபாடு விளைப்பானானால்‌, அவனைக்‌ குற்றவாளியாகக்‌ கருதி தண்டனையளிக்க வேண்டும்‌. இக்கால்‌ அக்‌ காத்தல்நிலை இல்லாமல்‌ இருப்பதே நாம்மொழி நிலையில்‌ வளர்ச்சிபெற முடியாமற்‌ போவதற்குக்‌ காணியமாகும்‌.

13: 6: இனி, அப்‌ புன்மையாளரின்‌ மொழிநிலைச்‌ சிதைவுகளால்‌ உருவாக்கப்‌ பெற்ற இலக்கியங்கள்‌ நெடுநாளைக்கு நிற்கும்‌ வல்லமை பெற்றனவல்ல. சருகுகள்‌ போன்ற எளிய மொழி நடைகளில்‌ பற்றுகின்ற இலக்கிய நெருப்பு, கால ஊழிகளுக்கு ஈடு தரும்‌ கனப்புடையதாக இருப்பதில்லை. அவை அடுத்துவரும்‌ சில ஆண்டுகளிலேயே பூத்துச்‌ சாம்பலாகப்‌ போய்விடுவதை அவர்கள்‌ உணர்தல்‌ இயலாது. கீழை இலக்கியங்களிலும்‌ சரி, மேலை இலக்கியங்‌ களிலும்‌ சரிமொழிக்‌ கோப்பு, அமைந்த இலக்கியங்களுக்கு ஒரு தனிச்‌ சிறப்பு இருந்து வருவதை அறிஞர்கள்‌ கூர்ந்து கவனிக்க வேண்டும்‌.

13 : 7: இவ்விடத்தில்‌ ஒன்றைத்‌ தெளிவாக அறிந்து கொள்ளுதல்‌ நல்லது. மொழிநடையின்‌ கட்டுக்கோப்புஎன்பது, பொதுமக்களுக்கு அயலான அல்லது அவர்களின்‌ கருத்துப்படி - கடினமான சொற்களால்‌ அமைந்த நிலையே அன்று. சொல்லில்‌ கடினமானது என்றும்‌ எளிமையானது என்றும்‌ இல்லை. நாம்‌ அறியாத எளிய சொல்லும்‌ கடினமே. நாம்‌ அறிந்த அரிய சொல்லும்‌ எளியதே! கல்லாதவர்களுக்கு எல்லாச்‌ சொற்களும்‌ கடினந்தான்‌. பொதுவாகப்‌ புழக்கத்தில்‌, என்பது தொண்ணூறு விழுக்காடு பயின்று வரும்‌ சொற்களை எளிய சொற்கள்‌ என்று நாம்‌ கூறி வருகின்றோம்‌. இருபது முப்பது விழுக்காடு பயிலும்‌ சொற்களைக்‌ கடினமான சொற்கள்‌ என்று