பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-27-

15 :0 இலக்கியக்‌ கட்டுக்‌ கோப்பு:

15 : 1: எப்பொழுதும்‌ கூர்மையான சொல்லாக்கமே இலக்கியத்தைக்‌ கட்டமைத்து, எக்காலத்தையும்‌ எதிர்கொண்டு நிற்கும்படி வலிவுடையதாக்குகின்றது. மொழி நடை காலத்திற்குக்‌ காலம்‌ மாறுபடுகின்றது என்பது உண்மையே! ஆனாலும்‌ இலக்கியத்தில்தான்‌ மொழியின்‌ மூல நிலைகள்‌ பதிந்து வைக்கப்‌ பெறுகின்றன. மொழி, இலக்கியத்தில்‌ வேரூன்றி, மக்களின்‌ புற ஈடுபாடுகளில்‌ அண்ணாந்து தலை விரித்து நிற்கின்றது.

15: 2: மக்களின்‌ மொழியே காலத்திற்குக்‌ காலம்‌, நாளுக்கு நாள்‌, இடத்திற்கு இடம்‌, இவர்களின்‌ உணர்வு மாற்றங்களுக்கும்‌ வாழ்வியல்‌ தாக்குதல்களுக்கும்‌ ஏற்ப மாறுபாடு அடைவது. இலக்கியமோ நிலையான மலைகளைப்‌ போல்‌ நின்று, தன்‌ மொழியைக்‌ கட்டிக்‌ காவல்‌ செய்கின்றது. இவ்‌ வகையில்‌ உலக மொழிகளில்‌ இல்லாத ஒரு பெருஞ்‌ சிறப்பைத்‌ தமிழ்‌ மொழியில்‌ பார்க்கலாம்‌. தமிழ்‌ இலக்கியங்கள்‌ உலகின்‌ வேறு எந்த மொழி இலக்கியங்களைக்‌ காட்டிலும்‌ மொழிச்‌ சிறப்பும்‌, எண்ணச்‌ சிறப்பும்‌ பெற்றுத்‌ திகழ்வதற்கு ஒரு வாறு மொழியமைப்பும்‌ கரணியம்‌ என்க. இலக்கிய மொழியும்‌, பேச்சு மொழியும்‌ பழந்தமிழ்மொழியறிஞர்களாலேயே பாகுபாடு செய்யப்பெற்றுக்‌ கடலைப்‌ போலும்‌ அதன்‌ கரையைப்‌ போலும அருகருகு நிலைநின்று இயங்கி வருகின்றன. காலச்‌ சேதங்களால்‌ கரையின்‌ வடிவம்‌ பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டாலும்‌, கடல்போல்‌ மொழிச்சிறப்பு தமிழ்‌ இலக்கியங்களில்‌ தேங்கி நிற்கின்றது. இந்நிலை வேற்று மொழி இலக்கியங்களில்‌ காணப்படுவது அரிது.

16: 0: கருத்தும்‌ நடையும்‌:

16 : 1: இலக்கியங்களுக்கு மக்கள்‌ பேசுகின்ற மேலோட்டமான மொழிநடை தேவைப்படவே படாதா என்று