பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-29-

என்பதே இலக்கியவாக்கத்தில்‌ காலத்தைக்‌ கடக்கும்‌ ஆற்றலுடையது. புறநாறூற்றுக்‌ கருத்துகளை நிலை மண்டிலத்தில்‌ எழுதியிருந்தாலும்‌, உலகப்பண்பாட்டைக்‌ கலிப்பாவில்‌ எழுதியிருந்தாலும்‌ என்றோ இரண்டும்‌ அழிந்து போயிருக்கும்‌!

16 : 4: ஈசல்களைப்‌ போல்‌ பொலபொலவெனப்‌ பூத்து வெளி வந்து சிறகடித்துப்‌ பறக்கும்‌ இலக்கியங்கள்‌ காலத்துக்கே எருவாகின்றன. அவை சிறந்தன, உயர்ந்தன என்று எத்தனை தாம்‌ வான்முட்டப்‌ பேசி வாய்ப்பறை கொட்டினாலும்‌, காலையில்‌ தோன்றி மாலையில்‌ கருகி நிற்கும்‌ காளாம்பிகளைப்‌ போல்‌, அவையும்‌ விரைந்து அழிந்து போகவிருப்பதைப்‌ பார்க்கையில்‌, அவற்றின்‌ இலக்கிய வாசிரியர்கள்மேல்‌ இரக்கப்‌ படாமல்‌ இருக்க முடியாது.

16 : 5: மற்று, இலக்கியம்‌ எந்த வடிவில்‌ வேண்டுமானாலும்‌ இயங்கலாம்‌. பாட்டு, உரைநடை, கதை,கட்டுரை, பழமொழி, ஒப்பாரி, தாலாட்டு, விடுகதை முதலிய யாவும்‌ இலக்கியப்‌ பெருமை வாய்ந்தனதாம்‌. இவை கருத்திற்‌ கேற்பவும்‌, காலநிலைக்கேற்பவும்‌, அமைந்து, நிலைத்து நிற்கவும்‌ அழிந்து போகவும்‌ செய்கின்றன. கழகக்‌ காலப்‌ பாடல்கள்‌ நிற்பதைப்‌ போலவே, அன்றிருந்த பழமொழிகளில்‌ சிலவும்‌ இன்று வாழ்வதைப்‌ பார்க்கின்றோம்‌. மாந்தரின்‌ உணர்வு நிலைகளின்‌ அடியூற்றங்கள்‌ என்றென்றும்‌ ஒன்றுதாமே! அவர்களின்‌ புற மாறுபாடுகளால்‌ அவை அழிவுறுவதில்லை. எனவே, கருத்தும்‌ நடையும்‌ மொழிக்கு இருகரைகள்‌ போல்‌ இருந்து, இலக்கியத்தைக்‌ கட்டிக்‌ காக்கின்றன.

17: 0 இலக்கிய வகை:

17 : 1: இலக்கியங்கள்‌ பலவகையன. மாந்தனுக்கு மிக இன்றியமையாத உணர்வுகளான காதலும்‌ வீரமும்‌ தழுவிய