பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-30-

இலக்கியங்களே மக்களைப்‌ பெரிதும்‌ கொள்ளை கொள்ளுகின்றன. உலக இலக்‌கியங்களிலேயே காதல்‌ இலக்கியங்களும்‌ வீர இலக்‌கியங்களுந்தாம்‌ மிகுதி. இவை தவிர, சமய விலக்கியங்களும்‌, அற விலக்கியங்களும்‌, போர்‌ இலக்கியங்களும்‌, இன விலக்கியங்களும்‌, குல விலக்கியங்களும்‌, வரலாற்றிலக்கியங்களும்‌, குழந்தை இலக்கியங்களும்‌ உண்டு. இவற்றிலும்‌ அவையவற்றின்‌ தரங்களுக்கேற்ப மொழிநடை மாறுபடுவதுண்டு.

17 : 2: இக்காலத்தில்‌ குல, இன, இலக்கியங்களுக்கு மதிப்பில்லை. அறவிலக்கியங்கள்‌, சமயவிலக்கியங்கள்‌ ஆகியவற்றிற்குங்கூட இளைஞர்களிடத்தில்‌ அத்துணை வரவேற்‌பில்லை. காதல்‌இலக்கியங்களும்‌, வீர இலக்கியங்களும்‌ என்றும்‌ போல்‌ வரவேற்கப்‌ பெற்றாலும்‌ உணர்வு நிலைகளில்‌ சிறிது மாறுபட்டு விளங்குதல்‌ வேண்டும்‌ என எதிர்பார்க்‌கின்றனர்‌. இக்கால்‌ செய்யப்பெறும்‌ அவ்வகை இலக்கியங்‌களில்‌ பாலியல்‌ உணர்ச்சி பெரிதும்‌ புகுத்தப்‌ பெறுகின்றன. இடைக்காலத்துப்‌ புலவர்கள்‌ சில எழுதிய தூது, உலா, மடல்‌, அந்தாதி என்னும்‌ சிற்றிலக்கிய வகைகளில்‌ இடையிடையே பாலியல்‌ உணர்வு தூண்டப்‌ பெற்று வந்தன. அவற்றைப்‌ பெரிதும்‌ சுவைத்த செல்வர்களுக்காகவும்‌, சிற்றரசர்களுக்காகவும்‌ அவ்வாறு எழுதப்பெற்றன. அவற்றுள்‌ சொல்லார வாரத்திற்காகவும்‌, சுவைக்காகவும்‌ தமிழ்‌ மொழிச்‌ சொற்களுடன்‌ வடமொழிச்‌ சொற்கள்‌ வரைதுறையின்றிக்‌ கலக்கப்‌ பெற்றன. மொழியைப்‌ பற்றி அக்கறையற்ற வறுமைப்‌ புலவர்களே, மூடச்‌ செல்வர்களிடம்‌ பரிசில்‌ பெறவேண்டி அவ்வகை இலக்கியங்களை ஏராளமாக எழுதிக்‌ குவித்தனர்‌. அவை மொழிச்‌ சிறப்பிழந்தமையால்‌, காலச்சிறப்பும்‌ இழந்து கணக்களவில்‌ எண்ணப்பெறுகின்றன.

17 : 9: கழகக்‌ காலத்திற்குப்பின்‌ உள்ள இலக்கியங்களின்‌ மொழிநடை வீழ்ச்சியும்‌, தரக்குறைவும்‌, இயற்கையறிவுக்‌