பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-33-

படுகின்றது. இக்கால இலக்கியங்களிலும்‌ பாடநூல்களிலும்‌ மொழிநடை கவனிக்கப்‌ பெறுவதேயில்லை. இங்குள்ள செய்தித்தாள்களிலும்‌, கிழமை, மாத வெளியீடுகளிலும் மொழிக்‌ கொலையும்‌ இலக்கிய வேள்வியும்‌ அன்றாடம்‌ நடைபெறுகின்றன. இவ்வகையில்‌ பொதுமக்களின்‌ மொழியறிவை இலக்கிய வாசிரியர்கள்‌ பெரிதென மதிக்கும்‌ படி செய்துவிடுவார்களோ என்றுகூட எண்ணவேண்டியிருக்‌கின்றது. இலக்கியத்‌ திறனாய்வாளர்களும்‌ இக்கால்‌ உள்ள போலி நிலைகளைக்‌ கவனியாது புறக்கணிப்பாகவே இருந்து வருகின்றனர்‌.

18 : 4 இக்காலப்‌ பாட்டிலக்கியத்தைபற்றி எண்ணிப்‌ பார்க்கவே வருத்தமாயிருக்கின்றது. வாய்க்கு வந்ததைப்‌ பாடுவது ஒரு மரபாகவே கடைப்பிடிக்கப்‌ பெற்று வருகின்றது. அவற்றில்‌ உள்ள ௧௫, கூறப்பெறும்‌ கருத்து, கையாளப்பெறும்‌ மொழிநடை, யாப்புநிலை - யாவும்‌ மேலோட்டமான புல்லிய நிலைகளையே பற்றி நிற்கின்றன. எழுத்து, அசை, சீர்‌, தளை, அடி, தொடை என்பவெல்லாம்‌ குப்பைக்குப்‌ போய்‌ அமுகத்‌ தொடங்கிவிட்டன. அவற்றிற்கெல்லாம்‌ கட்டுப்படாத சொல்‌ எம்பல்கள்‌ அமைந்த உரைநடைத்‌ தொடர்களே பாடல்கள்‌ போல்‌ மடக்கி எழுதப்‌ பெறுகின்றன. வில்லியும்‌ ஒட்டக்கூத்தனும்‌ இக்கால்வந்தால்‌, அவர்கள்‌ காதுகளும்கைகளும்‌ ஒட்ட நறுக்கப்‌ பெற்றாலும்‌ வியப்பதற்கில்லை! மொழி இன்றுள்ள இலக்கிய மேய்ப்பர்களிடையே படாத பாடு படுகின்றது.

18 : 5 தமிழ்‌ மொழியில்‌ உள்ள சொற்களில்‌ பத்துப்‌ பதினைந்து விழுக்காட்டுச்‌ சொற்களே இக்கால்‌ பயன்படுத்தப்‌ பெற்று வருகின்றன. பெரும்பாலும்‌ ஒரு பொருளுக்குள்ள பல்வேறு பண்புகளைக்‌ குறிக்கும்‌ பல சொற்களில்‌ ஒன்றோ இரண்டோ தாம்‌ திரும்பத்‌ திரும்பக்‌ கையாளப்பெறுகின்றன. மிகுதியள்ள சொற்கள்‌ தேவையற்ற சொற்பட்டியல்‌ என