பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-34-

இழித்துரைக்கப்‌ பெறுகின்றன. இக்கால இலக்கிய ஆசிரியர்களுக்குத்‌ தலைமுடி நிறைந்து பம்மியிருந்தால்‌ மூளை பெரிதென்று கருதப்‌ பெற்று விடுகின்றதால்‌, எல்லாரும்‌ தலைமுடியை முள்ளம்‌ பன்றியைப்‌ போல்‌ கிலிர்ப்பிவிட்டுக்‌ கொண்டு திரிகின்றனர்‌.

18: 6 ஆழமற்ற உணர்வு, அழமற்ற அறிவுநிலை, ஆழமற்ற மொழித்திறன்‌, அழமற்ற வாழ்க்கை நிலைகள்‌ இவற்றிலேயே இலக்கியவாக்கம்‌ முடிவடைந்து இலக்கிய வெற்றியும்‌ கிடைத்து விடுகின்றது. மனத்தின்‌ மிக எளிய நிலைகளிலேயே மக்கள்‌ நிறைவடைந்து விடுகின்றனர்‌. நரம்புத்‌ தளர்ச்சியுள்ளவன்‌ தன்‌ மனைவியைத்‌ தொட்டவளவிலேயே நிறைவடைந்து விடுவதைப்‌ போல்‌, மூளைத்‌ தளர்ச்சியடைய இன்றைய எழுத்தாளர்கள்‌, மொழியைத்‌ தொட்ட அளவிலேயே மூதறிவுற்றவர்களாக மதிக்கப்‌ பெறுகின்றனர்‌.

18 : 7 மேற்கூறப்‌ பெற்ற நிலைகளுக்கெல்லாம்‌, மக்களிடை அறிவியல்‌ உணர்வு தலைதூக்கியதே கரணியம்‌ என ஓர்‌ அமைவு கூறப்பெறுகின்றது. அரசியல்‌ மேலீடே கரணியம்‌ என்றும்‌ ஒருசார்பில்‌ உரைக்கப்‌ பெறுகின்றது. எப்படியும்‌ இலக்கியத்‌ தரம்‌ தாழ்ந்து போவது மக்களிடை மனவுணர்வுக்‌ குறைபாட்டையே காட்டும்‌. அவர்களிடை இக்கால்‌ ஏற்பட்டிருக்கும்‌ பண்புச்‌ சிதைவுக்கும்‌, ஒட்டுறவு இல்லாத நடைமுறைகளுக்கும்‌, அவர்தம்‌ மேலோட்டமான இலக்கிய வுணர்வே பெருங்கரணியமாம்‌ என்க.

19 : 0 மொழிநிலை உணர்வு:

19 : 1 எஃது எவ்வாறாயினும்‌ இந்நூற்றாண்டின்‌ முற்‌ பகுதியிலிருந்த மொழிப்‌ புறக்கணிப்பு நிலை, இக்கால்‌ ஓரளவு குறைந்து வருவதை ஒரு புறத்தில்‌ பார்க்கின்றோம்‌. அந்நிலை எதிர்கால இலக்கிய வளர்ச்சியில்‌ ஒரு நம்பிக்கையை ஊளட்டுகின்றது. கற்றவர்களிடையில்‌ உள்ள ஒரு கணிசமான