-36-
அக்ககைய வகையில் என்ன பணிகளைச் செய்யலாம் என்பது பற்றிச் சிறிது எண்ணிப் பார்ப்போம்.
20 : 0 தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்:
20 : 1 நம் செந்தமிழ் மொழியில் உள்ள பழைய இலக்கியங்கள் என்றென்றும் தத்தம் தனிப்பெருமையைப் பறை சாற்றி நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால், அத்தகைய பெருமை நிலைகளுக்கெல்லாம் இழுக்கு நேரும் வகையில், இக்கால இலக்கியம் இழிந்து படுவதையும், அதையொட்டி மொழி இழிந்து வருவதையும் நாம் முதற்கண் தடுத்து நிறுத்தியாகல் வேண்டும். மொழித் தகவற்ற இலக்கியத் தோற்றங்களைத் துணிந்து கடிவதற்கு நாம் கற்றுக் கொள்ளல் நல்லது.ஆட்சி நிலைகளில் தவறுகண்டால் நாம் இடிந்துரைப்பதைப் பழகிக் கொண்டது போல்,நம்மைச் சுற்றி எழும் போலி இலக்கியங்களையும் அவ்வாறு தட்டிக் கேட்பதற்கு நாம் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.
20 : 2 ஊருக்கு ஒன்றாகவோ, மாவட்டத்துக்கு ஒன்றாகவோ இலக்கியக் கழகங்களைத் தோற்றுவிக்க வேண்டும். அவ்விலக்கியக் கழகங்களில் தமிழ்மொழிப் பற்றும் துணிவும் வாய்ந்த பல்துறை அறிஞர்களை ஒருங்கு கூட்டி, “இலக்கிய ஆய்வுக்குழு” எனும் பல குழுக்களை அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவையும் தலைமையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டக் கழகமும், அனைத்து மாவட்டக் கழகங்களுக்கும், பொதுவாக ஒரு மாநிலக் கழகமும் அமைத்தல் வேண்டும்.
20 : 3 ஆங்காங்கு உள்ள இலக்கிய நூலாசிரியர்களும், பிறதுறை நூலாசிரியர்களும் தாங்கள் எழுதுகின்ற நூல்களின் கைப்படியினை, அச்சிடுவதற்கு முன்பே, அந்தந்த இலக்கியக் கழகங்களில் உள்ள ஆய்வுக்குழுவிடம் ஒப்படைத்து, அக்கழகங்களின் சான்றிதழ் பெறுதல் வேண்டும். ஆய்வுக்