பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனின்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. பிறவிச் சிறப்புக்கும்கூட மொழியை அடிப்படையாக்குகின்றது வள்ளுவர் வாய்மொழி. (குறள் : 959). தெளிவான மொழி தெளிவான எண்ணங்களின் வெளிப்பாடு. நன்றாக எண்ணத் தெரிந்தவன் நல்ல மொழியைப் பயன்படுத்துகின்றான். தெளிவற்றவனே மொழியைக் குழப்புகின்றான்.

பேச்சை அடிப்படையாகக் கொண்டிருந்த மொழி எழுத்தையும் அடியொற்றி வாழத் தொடங்கியது மாந்த நாகரிகத்தின் இரண்டாவது படிநிலை ! எனவே பேச்சும் எழுத்தும், மொழிக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடுமாகும். ஒரு பெண் பிறந்த வீட்டில் வளர்ச்சியுற்றுப் புகுந்த வீட்டில் மலர்ச்சியுறுவதுபோல், மொழி, பேச்சு வழக்கில் வளர்ச்சியுற்று, எழுத்து வழக்கில் மலர்ச்சியுறுகின்றது.

மொழிக்குத் தலைவன் மொழியாளுநனாகிய எழுத்தாசிரியனே! அவனே இலக்கண ஆண் குழந்தைகளையும்