இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
'கரந்தைத் தமிழ்ச்சங்கம் 15-4-73 அன்று நடத்திய தமிழவேள் த.வே. உமாமகேசுவரனர் மணிவிழாக் கருத்தரங்கில் திரு. அ. ச. ஞானசம்பந்தன், க.மு. - அவர்கள் தலைமையில் படிக்கப் பெற்ற கட்டுரை.)
1: 0. மொழியின் இன்றியமையாமை: -
1: 1: மாந்த இனத்தின் அகப்புற வளர்ச்சிக்கான பல்வேறு கூறுபாடுகளில் மொழி ஓர் இன்றியமையாத உறுப் பாகும். உடல் வளர்ச்சிக்கு எப்படி உணவு முகாமை யானதோ, அப்படியே உள்ளத்தின் வளர்ச்சிக்கும் மொழி முகாமையானதாகும். ஏதோ ஒருவகையில் மொழியைச் சுவறிக்கொள்ளாத உள்ளம் வளருவதேயில்லை. மக்கள் தங் களுக்குள்ள கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவி என்பதாக மட்டும் மொழியை மதிப்பிட்டுவிடக் கூடாது. மொழியின் சிறப்பான பயன்களுள் கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் தன்மையும் ஒன்ருக விருக்கிறதே தவிர, அஃது ஒரு கருவி என்னும் அளவில் மட்டும் அதன் பயன் அடங்கு வதன்று. - - - - • : - 2: மொழியின் சிறப்பியல்கள்:
மொழியின் சிறப்பியல்களைக் கீழ்வருமாறு கூறலாம். 2: 1: மொழி அக வளர்ச்சியின் புற வெளிப்பாடாகும். 2: 2: இவ்வுலகிற்கும் மக்களுக்கும் உள்ள தொடர் பைத் துலக்கிக் காட்ட மொழியைப்போல் வேருெரு வெளிப்பாடு மாந்தரிடத்தில் இல்லை. - .