பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஒளவையார்

சங்க காலத்தில் கடை எழு வள்ளல்கள் என்று குறிப் பிடத் தக்கவர்கள் பாரி, ஓரி, ஆய் அண்டிரன், திரு முடிக்காரி, நள்ளி, நெடுமான் அஞ்சி, பேகன் என்பவர்கள், இவர்களுள் ஒருவனான நெடுமான் அஞ்சி என்பவன், அ தி க ம ா ன் நெடுமான் அஞ்சி என்றும், அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்றும் அழைக்கப்படுபவன். இவன் போரை விரும்பும் தோளினன். போருக்குச் சென் றால், பெரிதும் வெற்றியுடன் திரும்பும் வீர தீரன்' சேரன், சோழன், திதியன், எருமையூரன், இருங்கோ வேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் எழு வரையும் வென்ற வெற்றி வீரன். இவன் மழவர் குடி.க்குத் தலைவனாக விளங்கியவன். தகடூருக்குத் தலைவன். குதிரை மலையும் இவனுக்கு உரியதே. இவனுக்கு வெட்சி மாலை அடையாள மாலையாகும். வேங்கை மலரும் கூவிளங் கண்ணியும் (மாலையும்) சூடும் சூரனாவான். இவன் சேர மன்னர் மரபின் தொடர்புடையவன் என்று கருதப் படுவதால், அம்மரபினர் மாலையாகிய பனம்பூ மாலையையும் பாங்குற அணியும் பார்த்திபன் ஆவான்,

நாம் இதுபோது கரும்பின் சுவையினை நன்கு சுவைக்கிறோம். இக் கரும்பு தமிழ்நாட்டில் தோன்று தற்கு ஆதிகாரணர் இந் நெடுமான் அஞ்சியின் முன்னோரே ஆவர், அம் முன்னோர்கள் தேவர்களைப்