பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

மான் தனது தொண்டன் உள்ளக்கருத்தையும், தன் தேவியின் சேடியர்களின் எண்ணக் குறிப்பினை யும் அறிந்து ஆலால சுந்தரரை விளித்து "அன்பு! நீ கொண்ட எண்ணங் குறித்து எமக்கு மகிழ்வே என்றாலும், உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இஃது இடம் அன்று. ஆகவே, சுந்தர், நீ நிலவுலகில் பிறந்து உள்ளம் விரும்பியவாறு கடிமணம் புரிந்து, பின்பு ஈண்டு அடைவாயாக” என்று ஆணை பிறப்பித்தனன். ஆலால சுந்தரர் அவ்வாணையினைத் தலைமேற் கொண்டு நில உலகில், தோன்றும் வாய்ப்பினைப் பெற்றனர்.

ஆலால சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே ஆதிசைவர் மரபிலே சடைய னார், இசைஞானியார் ஆகிய இருவர் செய்த தவப் பேற்றினால் திரு மகனாராகப் பிறந்தருளினார். அப் போது இவருக்கு இடப்பட்ட பெயர் நம்பி ஆரூரர் என்பது, இவரைப் போலவே, கமலினியார் 6என்ப வர் திருவாரூரில் தோன்றினார். அப்போது அவ் வம்மையார் திருப் பெயர் பரவையார் என்பது. இவ் வம்மையாரைப் போலவே அனிந்திதையாரும் ஞாயிறு என்னும் ஊரில் ஞாயிறு கிழார் என்பவருக். குத் திருமகளாராகத் தோன்றினார். அதுபோது இவ்வம்மையாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சங்கிலியார் என்பது.

நம்பி ஆரூரர் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்து, இறையன்பு மிகுதியும் பெற்று, அழகிய தோற்ற முடையவராய் விளங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களைக் கண்டு,