பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை37

இருக்க, மற்றொருத்தியின் மீதும் சுந்தரர் உள்ளம் சென்றதே” என்று துன்பம் மேலிட்டு, நம்பியாரூரர் 4மீது சினங் கொண்டிருந்தனர்.

நம்பி ஆரூரர் நேரே தம் இல்லமாகிய பரவை யார் திருமாளிகைக்குச் செல்லாமல், ஆரூர்த் தியாகர் அலரடி. வணங்கிச் செல்ல வேண்டுமென்று ஆல..பம் சென்று வழிபாடு ஆற்றி வருவதற்கு முன், தம் வருகையினை முன் கூட்டிப் பரவை யார்க்கு அறிவிக்குமாறு தம் பரிசனங்களுக்குச் சொல்லிவிட்டனர்.

அவர்கள் பரவையார் மாளிகையை அணு கிச் செய்தியினைச் சொல்ல முனைந்தபோது, சுந்தரர் மீது கொண்ட சீற்றம் காரணமாக, அவர்களை உள்ளே விடவும், வெளியில் உள்ளார் மறுத்து விட்டனர். இதற்குக் காரணம் இன்னது என் பதை அறிந்த சுந்தரர் அனுப்பிய பரிசனங்கள் சுந்தரரிடம் “பெரும! நீர் தொண்டை நாட்டில் திரு ஒற்றியூரில் சங்கிலியார் என்பவரை மணந்ததைப் பரவையார் உணர்ந்து உம்மாட்டுச் சினம் மிகுதியும் கொண்டிருக்கின்றார். அதனால் நாங்கள் உள்ளே செல்ல இயலவில்லை என்றனர்.

நம்பியாரூரர் இதைக் கேட்டுத் துணுக்குற்று, அறிஞர் ஒருவரை அம்மையார் மாளிகைக்குச் சென்று சீற்றம் தணிக்குமாறு செப்பிவிட்டனர். அவர்களும் அப்படியே சென்று பரவையாரைக் கண்டு சமா தான மொழிகள் பல சாற்றியும் அவ்வம்மையார், "பெரியீர்! நம்பி யாரூரரைப் பற்றி ஒன்றும் என்