பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை18

ணி...ம் கூறாதீர். அவர் குற்றம் உடையவர். அவர் சாரி 4.பில் மேலும் பேசினால், என் உயிர் என் உடலில் தில்லா து” என்று உறுதியாகக் கூறிவிட்டனர்,

சென்ற பெரியவர் அதற்கு மேல் ஒன்றும் பேச வழி அற்றவராய்த் திரும்பித் தேவாசிரிய மண்டபத் தில் அமர்ந்து பலவாறு எண்ணிக் கொண்டிருந்த சுந்தரரை அணுகிப் பரவையார் உள்ளக் கிடக்கை யினை உரைத்தருளினார்.

தம்பிரான் தோழர், "இனி எம்பெருமானைத் தவிர்த்து இவ் விடர்க்கடலினின்று ஏற்றுவார் எவரும் இலர்" என்று எண்ணித் திருவாரூர் தியாகேசனை நோக்கி, “வள்ளலே! என் செயல் களுக்கெல்லாம் காரணம் முன்னை ஊழ்வினை அன்றோ ? அதனை முடித்து வைக்கின்றவரும் நீயே அல்லரோ? ஆகவே, பரவையின் பிணக். கத்தினை நீர்தாம் தீர்க்க வேண்டும்” என்று விண் ணப்பித்துக் கொள்ளும் முறையில், இறைவரே! நீர்தாம் தலைவர். நான் உமக்கு அடிமை. மேலும் நீர் எனக்குத் தாயினும் மிக்க அன்புடைய நண்பர் ஆகவே, எனது மனச் சோர்வை உணர்ந்து இன்று இரவே பரவையர் வீடு சென்று, அம்மாது என் மீது கொண்டுள்ள மன மாறுபாட்டை நீக்கி அருளுக' 6என்று வேண்டினர்.

இவ்வாறு சுந்தரர் வேண்டியதைக் கேட்ட இறை னர் ஆரூரரை நோக்கி “துன்பம் ஒழிக. யாம் உனக் க." கத் தாதனாக இப்பொழுதே பரவை இல்லம் போய்