பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை4ம் 2,கும் என்று எனக்குத் தோன்றுகிறது” ordt door it.

இவ்வாறு இராமர் கூறக்கேட்ட இராவணனது இளவலாம் விபீடணன் “இராமா, நீ கூறுவது முற் றிலும் அழகிய கருத்தேயாகும்" என்று தன் கருத்தி னையும் கூறினன். குரங்குகட்குத் தலைவனான சுக்ரீ வனும், "இரகு குலதிலக, தாது போக்குதல் மன்னர்க்குரிய நீதி முறையாகும்” என்று மொழிந் தனன்.

ஆனால், இலக்குவன் மட்டும், “அண்ணா பிற ரிடம் சென்று ஒன்றை இரப்பது இழுக்காகும். ஆகவே, அம்பு தொடுத்து அரக்கனை அழித்துச் சீதையை விடுதலை செய்தலே உசிதம். இராவண னிடம் தாதனை அனுப்பாது போரில் அவனைக் கொல் வதே முறை. அவன் தேவியைச் சிறையிட்டவன் ; தேவர்கட்குத் துன்பம் விளைவித்தவன்; அந்தணர் கட்கு துன்பம் புரிபவன்; உயிர்களை வாட்டி வதைப் பவன்; ஆசையின்' மிகுதியினால் அகிலமெல்லாம் தானே ஆள் எண்ணமுள்ளவன்; நல்வழியில் நட வாதவன்; நீ துன்புறும்படி. உன் தேவியை உன்னை விட்டுப் பிரித்து வைத்தவன்; சீதை மீது இரக்கம் கொண்டு எதிர்த்த சடாயுவையும் கொன்ற மகா பாவி, மற்றொன்றையும் உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீ கூறியனுப்பும் முறைப்படி அவன் ஒருவேளை சீதையினைச் சிறை நீக்கம் செய்தால், பின்பு போர் நிகழுமா ? போர் நிகழாதாயின் இராவணன் கொல்லப்படுவானா? அவன் கொல்லப் பட்டி லன் எனில், அவனுக்குரிய அரசை உன்னை