பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

(rarணவும் தொடங்கினான். “ஆ! என்ன கம்பீர LAbான தோற்றம்! இவனைக் கொல்ல ஓர் இமயன்கூட இருக்க முடியுமா ? ஆ! என்ன மடமை எனக்கு ! இவனைக் கொல்ல இராமர் கை அம்பு உண்டன்றோ? இதனை அறியாது இவ்வாறு கூறிவிட்டேனே ?* (6r6bறு தன் மனத்துக்குள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத முறையில் பலவாறு எண்ணினன்.

இவ்வாறு பலவாறு எண்ணிய அங்கதன், கடு மையரன கனலும், விடமும், இயமனது கொடுமை பும் ஒன்று சேர்ந்து, கைகள் பெற்று, ஒளியுடைய முtடி, புனைந்து கருங்கடல் உருக்கொண்டு வீற்றிருந் தாற் போல வீற்றிருந்த இராவணன் சபையை தேருங்கினான்.

தன் எதிரே சிறிதும் அஞ்சாது வந்து நிற்கும் அங்கதனைக் கண்ட தசக்கிரீவன் (பத்துத் தலைகளை MARI)...ய இராவணன்) கண்களில் தீப்பொறி பறக்கக் (கோபக் குறியுடன், “அடே நீ யாவன்? இங்கு நீ வந்த காரணம் யாது? இங்குள்ளவர் உன்னைக் கொன்று புசிப்பதற்கு முன்பு, நீ வந்த காரணத்தை விரைவில் கூறுக” என்று அதட்டிக் கேட்டனன்.

இந்த வெஞ்சின மொழிகளைக் கேட்ட வாலி மைந்தன் சிறிதும் அச்சம் கொண்டிலன். ஆனால், விலாப் புடைக்க நகைத்திட்டான். என்றாலும், நகைத்த அளவில் நிற்காமல் தன்னை வினவியவினாக் சுளுக்கு விடை கூற வேண்டுமென்ற கருத்தின ஹாய், இராவணா, என்னை யாவன் என்ற வினவு. நின்றாய் ? யான் சீதை நாயகரான இராமர் விட்ட