பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை4. வீரவாகு

சூரபதுமன் என்பவன் மிக மிக வலியன், ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அதிபதி. அவன் தேவர் களுக்கு மிகவும் தீங்கிழைத்தவன். அவர்களைச் சிறைப்படுத்தியவன், அவன் கடல் நடுவில் பல, காவலைப் பெற்று விளங்கிய மகேந்திரபுரத்துக்கு அதிபதி, அத்தகையவன் பெறற்கரிய 'வரமும் திருவும் வாய்க்கப் பெற்றும், அவற்றைக் கொண்டு நன்முறையில் வாழாமல் செருக்குற்று வாழ்ந்து வந்தவன்.

அன்னவனது அட்டகாசங்களைக் கேள்வியுற்ற கந்தப் பெருமான், அவனையும் அவனைச் சார்ந்த அசுரர் களையும் அழித்து விண்ணவர்களைச் சிறை யினின்று நீக்கி, அவர்களை முன்போல் விண்குடி ஏற்றத் திருவுள்ளங் கொண்டனன்.

முருகப் பெருமான், எண்ணியபடியே உடனே இயற்றும் போராற்றல் பெற்றிருந்தும் நீதி, நெறி யினரின்றும் சிறிதும் தவறுதல் கூடாதென்று கருதி, முதலில் தூ த ன் ஒருவனைச் சூரபதுமனிடம் போக்கி, தேவர் களைச் சிறை நீக்குமாறு கூறுவோம். அதற்கு அச் சூரபதுமன் இசைந்திலன் எனில், அவனோடு போர் தொடுத்து, அவனையும் அவன் இனத்தையும் மாய்ப்போம்” என்று தீர்மானித்து, தனக்கு நிகரான வன்மை மிக்க வீரவாகு தேவரைச் சூரபதுமனிடம் தூதுவராக அனுப்ப முடிவு செய்