பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பேச்சைக் கேட்டு இங்கு வந்தனை, நீ தூதுவனாக வந்துள்ளாய் ஆதலால், இவ்விடம் விட்டுப் பிழைத்துப்போக உனக்கு உயிர்ப் பிச்சை தந்தேன். செல்க" என்றனன்,

வீரவாகு சூரபதுமனுடைய வார்த்தைகளைக் கேட்டுச் சினம் பொங்கி, “கீழ்மகனே ! எங்கள் குமாரக் கடவுளையா நீ பாலன் என்று எண்ணினாய்? அவர் யார் தெரியுமோ ? அவரே சிவபெரு மானாவர். திருவிளையாடற் காரணமாகக் குழந்தை பெடிவு கொண்டனர். அவருக்கும் பரமனுக்கும் வேறுபாடு இல்லை. மணியினின்று ஒலி எப்படி வேறுபடாது வெளிவருமோ, அதுபோல இவ்விரு வரும் பேதமற்றவர்கள். ஏகநாயகராம் முதல்வரை நீ பாலன் என்று இகழ்ந்தாய், யான் உன் மொழி கேட்டுப் பொறுத்தனன். உன் நாவை இந்தக் கணம் துண்டித்திருப்பேன். ஆனால், அவ்வாறு செய்யுமாறு ஆறுமுகன் ஆணையைப் பெற்றிலேன், உன்பால் தூதனாக என்னைப் போக விடுத்தனரே அன்றி, நீ சுடுசொல் கூறினால் உன் நாவினைத் துணிக்குமாறு கூறிலர். இன்னமும் உனக்குக், கூறுவன கேட்டி, நீயும் உன் கிளைஞரும் பிழைக்க எண்ணினால், தேவர்களைச் சிறை நீக்கம் செய்க. உனக்குள்ள பகைமையைப் போக்குக. ஆறுமுகக் கடவுள் அடிமலர்களைச் சரணம் புகுக” என்று கருணையும் இரக்கமும் தோன்றக் கழறினர்.

சூரபதுமன் இந்த வார்த்தைகட்குச் செவி சாய்ப்பானோ? அம்மொழிகள் எரியும் கொள் ளி'