பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

வாழ்ந்த பின்னர் நாட்டிற்கு வந்தால் வென்ற தாடுகளை மீண்டும் அவர்கட்கு அளித்திடுவதாக வாக்களித்த வண்ணம் அவர்கட்குரிய நாட்டினை நீங்கள் அளிப்பீரோ? அளியீரோ? உமது கருத்தினை அறிவியுங்கள். போர் தொடுத்து நாட்டைப் பெறு தல் அவ்வளவு பொருத்தமாகப் புலப்படவில்லை. நீங்கள் முன்னர் ஆடிய சூதினை மீண்டும் ஆடி அவர் கள் தோற்ற நாட்டைப்பெறுதற்கு ஒரு வாய்ப் பினைத் தருக, இல்லையேல் சண்டை செய்து அப் பாண்டவர்கள் தாம் இழந்த தம் நாட்டைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று கூறினும் கூறுக” என்று கூறி மேலும், “'போர் ஏற்படின், நீங்கள் வெற்றி காணுதல் அரிது. பாண்டவர்கள் வெற்றி பெறுதல் திண்ணம். வீரமிக்க வீமனும், அர்ச்சுனனும் போரில் ஈடுபட் டால் நீங்கள் அழிதல் திண்ணம். இஃது உண்மை . முனிவனாகிய என் உரை பழுதாகாது” என்று அஞ் சாது அறைந்திட்டார். இத்தகைய துணிவு துறவி களிடத்து அமைந்திருப்பதனால் அன்றோ, தெய்வுப் புலவர் சேக்கிழார் பெருமானார் “வீரம் என்னால் விளம்பும் தகையதோ? என்று விளம்பியும் உள்ளார்,

உலூகமா முனிவர் கி.ரைத்த மொழிகளைக் கேட்ட அரவக் கொடியோன் ஆத்திரம் கொ ண்ட னன். உடனே முனிவரைப் பார்த்து, நீங்கள் புகழும் வீமார்ச்சுனர் வீரத்தையும் எமது வீரத்தை யும் இப்போது ஒப்பிட்டுப் பார்ப்பதில் பயன் இல்லை. போர் முகத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என்று பட படத்துப் பகர்ந்தான்.