பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருகையைச் சொல்லக் கேட்டு அவர் திருவடிகளை வணங்கிக் கீழ் வருமாறு கூறத் தொடங்கினார் :

    • முனிவரே! நீர் குருகுலத்து அரசர்களுக்குரிய தொழில்களைக் கற்பிக்கும் குரு ஆவீர். கௌரவர் பாண்டவர் ஆகிய இரு பிரிவினரும் நீர் கூறும் மொழிகளை என்றும் மறுத்துப் பேசுபவர் அல்லர், இவர்கள் இப்பொழுது ஒருவர்க்கொருவர் பகைமை கொண்டு பலபடி. பேசிக் கொள்கின்றனர். இவர் கட்கு இடையேயுள்ள பிணக்கை நீர்தாம் போக்க வேண்டும். அவ்விரோத மனப்பான்மை ஒழிந்து கௌரவர்கள் இவ்வுலகை . ஆளுதற்கான வழி வகைகளை நீர் தாம் செய்யவேண்டும். நீர் நேரே பஞ்சபாண்டவர்கள் உறைவிடம் சென்று அவர்களை மீண்டும் காட்டகமே திரும்பி அருந்தவங்களைச் செய்து நற்கதி அடையும்படி கூறவும்" என்று சிறிதும் இரக்கம் இன்றி இசைத்தனர்,

சஞ்சய முனிவர் திருதராட்டிரர் கூறிய கூற் Pனைச் சிறிதும் மறுத்திலர். அப்படியே சென்று திருதராட்டிரர் எண்ணத்தை இயம்பி வருவதாகக் கூறிப் புறப்பட்டார், புறப்பட்டவர் பாண்டவர் இருந்த இடத்தினை வந்து அடைந்தனர். வந்தவர் முனிவர் ஆதலின், பாண்டவர் அவரை நன்முறை யில் வரவேற்றனர்; அவர் திருவடிகளில் தம் சென்னி பொருந்த வணங்கி எழுந்தனர். முனிவரும் அவர் கட்கு வாழ்த்துக் கூறி அமர்த்தினர். தாமும் தல்ல தோர் ஆதனத்தில் அமர்ந்தனர். பின்னர்த் தாம் வந்த காரணத்தை அறன் மைந்தன் (தருமர்) உட்