பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லைவானோ என்ற எண்ணத்தால் கிருட்டிணன் வாயு புத்திரனான வீமனை அமைதியுறுமாறு கூறி, பின் சஞ்சய முனிவரைப் பார்த்து, "முனிவரே இவ்விரு பகைவர் கூட்டத்திற்கு இடையே நாம் பேசி யாது பயன்? இப்பஞ்ச பாண்டவர்கள் தாமே இப்பூமியினை ஆளுதல் தவம் என்றும், கௌரவர்கள் விண்ணுலகம் புகுதல் தவம் என்றும் கருதுகின்றனர். ஆகவே, நீர் மீண்டும் சென்று துரியோதனாதியர்கட்குப் பாண்டவர் கருத்தைப் பகர்ந்திடுவீராக” என்று . மொழிந்தனன்.

  • சஞ்சய் முனிவர் அதற்குமேல் ஒன்றும் பேசிற் றிலர், கண்ண ன் கழறியபடியே அத்தினபுரம் நோக்கிப் புறப்பட்டனர். துரியனையும் திருதராட் டிரரையும் கண்டு தருமர் கூறிய மொழிகளையும் கண்ணன் மொழிந்த மொழிகளையும் வீமன் மொழிந்த வீர மொழிகளையும் ஒன்றையும் விடாது உரைத்திட்டனர்,