பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை62

சகாதேவன் இது தான் சமயம் என்று உணர்ந்து “முகுந்தா! நீ கூறியவாறே நான் நடந்து கொள்கிறேன். ஆனால், கொடிய பாரதப் போரில் நாங்கள் ஈடுபடும்போது உன் கடைக் கண்ணால் எங்களைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். கண்ணனும் அவ்வாறே செய்வதாக வாக்குத் தந்தனன்.

பின்பு இருவரும், யாவரும் கூடியிருந்த சபையை அணுகினர். அணுகியதும் கண்ணன் அங்குள் ளோரை நோக்கி, "சகாதேவ்னும் சமாதானமே தக்கது என்று மொழிந்திட்டான்" என்று கூறினான்.

இவ்வாறு கண்ணன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட திரெளபதி, கலங்கி வாய்விட்டுக் கதறி ""கோவிந்தா! என் கற்றையான கூந்தலைப் பற்றித் துச்சாதனன் என்னை அவமானம் செய்தபோது, இந் தப் பாண்டவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருந் தார்கள் ! அன்று என் மானத்தைக் காத்தவன் நீ தானே! இன்னமும் துரியன்பால் தூது அனுப்பி ஐந்து ஊர்களைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருந் தால், அன்று விரித்த கூந்தலை யான் என்று முடிப் பது?" என்று கூறிக் கண்ண ன் திருவடிகளில் வீழ்ந்து அழுதனள்.

இந்தத் துன்பக் காட்சியைக் கண்ட அச் சபை யில் இருந்த சாத்தகி என்பவரும் மனம் இளகிச் சிறிது கோபம் கொண்டு “வீமன் கையில் கதை என்னும் ஆயுதம் இருந்து யாது பயன்? அர்ச்சுனன் கையில் காண்டீபம் என்னும் வில் இருந்து யாது பயன்?