பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

வண்டு மொய்க்கும் அளவுக்கு மலர் சூடி இருக்க வேண்டிய திரௌபதியின் கூந்தலில் மாசு படிந் துளது. இன்னமும் பகைவர்பால் கெஞ்சி நாட்டைப் பெற்று வாழ எண்ணு கின்றீர்களே” என்று கூறினார்.

இப்படிச் சாத்தகி கூறியதையும் பாஞ்சாலி கூறி அழுது அரற்றியதையும் கண்ட க ண் ண ன் * மாதே, வருந்தாதே ! பா ண் ட வ ர் க ள் பொருட்டுக் கெளரவர்பால் நானே தூதுவனாகச் சென்று மீண்டதன் பின் உன் கூந்தலை நானே முடிக்க வழி செய்கின்றேன்" என்று கூறி அவளைச் சாந்தப் படுத்தினான்.

மாயோன் பொன்மயமான தேர் மீது அமர்ந்து முரசு ஒலிக்க, சங்கம் முழங்க, தாரைகள் ஒலிக்க வெண் குடை நிழலில் தங்கி இரு புறமும் சாமரை கள் இரட்டிப் புறப்பட்டனன். புறப்பட்டவன் இடையில் மலைகளையும், பாலைவனங்களையும், காட் டாறுகளையும், நன்செய் புன்செய் நிலங்களையும் கண்டு களித்து இரண்டு நாட்களில் கடந்து, மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் நீண்ட மதில்கள் சூழ்ந்த அத்தினாபுரத்தை அடைந்தனன்.

அத்தினாபுரம் நீர்வளம் நிலவளம் கொண்ட து. குளங்கள் யாவும் செந்தாமரை மலர் கள் மலர்ந்து, திருமாலாகிய கண்ணனை ஆலத்தி கொண்டு வர வேற்பனபோல வரவேற்றன. இந் நிலையில் திரு மகள் கேள்வனாம் (கணவனாம்) கண்ணன் ஒரு