இலக்கியத் தூதர்கள்
தூதர் பண்பு
வள்ளுவர் வகுத்துக் கூறும் பகுதிகளில் தூதும் ஒன்று. இப்பகுதியில் தூதுரைப்பவர்களின் இயல் புகள் அனைத்தும் இனிதின் இயம்பப்பட்டுள்ளன. தூதர் பண்பு இன்னது என்பதை முன்கூட்டி அறிந்தால்தான், இப்பண்பமைந்த தூதர்கள் தூதுச் செய்திகளை உரியவர்களிடம் இயம்பிய முறைகளை நன்கு விளங்கிக்கொள்ளலாம். இந்தக் காரணம் கொண்டே, தூதர் பண்புகள் முன்னர் விளக்கப் படுகின்றன.
தூதராகச் சென்று உரைப்பவர்களிலும் இரு வகையினர் உளர். ஒரு வகையினர் தம்மைத் துரதராகச் சென்று வருமாறு அனுப்பியவர் கூறியவற்றைக் கூறி வருபவர்கள். மற்ருெரு வகையினர் தாமாகவே சமயத்துக் கேற்ப வகுத்துக் கூறுபவர். ஆகவே இருவகையினர் ஆவர். இனி, இவர்கள் பண்பைச் சற்றுப் பார்ப்போமாக. துாது ரைப்பவர் தம் சுற்றத்தவரிடத்து, அதாவது தம்மைச் சார்ந்தவரிடத்து, அன்புடையராயும், நற்குடிப் பிறப் பினர்ாயும் இருத்தல் வேண்டும். தமக்கு முன் தம் மரபில் துTது சென்றவர் எவரேனும் இருப்பின், அவர்களின் இயல்புகளையும் கேட்டு அறிந்துகொள்
பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/7
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
