பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ணன்) துரியன் சபையினை அணுகிய போது, துரிய

றனர். தனக்கென அமைந்த ஆசனத்தில் கண் ணன் அமர்ந்தனன். உடனே அரவக் கொடியோன், அமலநா திபிரானை (கிருட்டிணனை) நோக்கி, எம் மூர் புகுந்தும், நேரே எம் மாளிகை புகாது விதுரர் இல்லம் சென்றது முறையோ?" என்று கேட்டனன். மாயையில் வல்ல மாயோன் ஆகிய கண்ணன் "மன்னா! எனக்கு உன் வீடு என்றும், பிறர் வீடு என்றும் வேறுபாடு கிடையாது. என்றாலும், விதுரர் தாம் அன்புடன் தம் இல்லம் வருமாறு வேண்டி னார். பிறர் எவரும் அவ்வாறு என்னை அழைத் திலர். ஆகவே, அவர் மாளிகைக்குச் சென்றனன்.

மைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது உனது பங்காளிகளால் ஏவப்பட்ட தூதனாகிய யான், உன் இல்லத்தில் தங்கி, உன் உணவினை உண்டு, உன் கருத்துக்கு மாறாக, நான் பேச நேர்ந் தால், அஃது ஒழுங்காகாதே. மேலும், அமைச்சராக இருந்து அரசை அழித்தாலும், பெரியோர் வார்த்தை களைத் தட்டி நடந்தாலும், பிறர் செய்த நன்றியை மறந்தாலும், ஒருவர் இல்லத்தில் உண்டு பின் அவ ரோடு போர் தொடுக்க எண்ணினாலும் அப்படிப்பட் டவர்கள் சந்திர சூரியர்கள் உள்ள வரையில் நரகத் தில் ஆழ்வார்" என்று மொழிந்தனன்,

இவ்வாறு கண்ணன் கூறக் கேட்ட துரியன் வேறு ஒன்றும் தொடர்ந்து வினவாமல் வந்த கார