பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ணத்தைக் கூறுமாறு வினவினன். கண்ணனும், “துரிய! உனது துணைவர்கள் சூதினால் அரசை இழந்தனர். பின் நீ சொன்ன சொற்படி, காட்டிடை கடக்க வேண்டிய நாட்களையும் கழித்து மீண்டும் வந்து சேர்ந்தனர். ஆகவே, அவர்கள் உரிமையினை உன்னைக் கேட்டுப் பெற யான் பாண்டவர் பொருட் டுத் தூதுவனாக வந்துள்ளேன். நீ உன் துணைவரை அழைத்து அவர்கட்குரிய நாடுகளைத் த ந் து அவர்களோடு பொருந்தி வாழ்க, இவ்வாறு செய் தால் உன்னை வாய்மையுடையவன் என்று அரசர் 'புகழ்வர். இவ்வாறு செய்திலை எனில், உனக்கு அற மும் ஆண்மையும் புகழும் ஏற்படா என்று இயம் பினன்.

இங்ஙனம் புகலக் கேட்ட இராச ராசன் சீற்றம் கொண்டு, “பாண்டவர்கள் இன்னமும் காட்டில் திரிவதே முறை. நீ வெறுத்தாலும் சரி, இங்குள்ள மன்னர் திகைப்புற்றாலும் சரி, பலப்பல எண்ணினா லும் சரி, பின்னால் என்னைப் பற்றி எள்ளி நகையாடி னாலும் சரி, நான் கூறிய வார்த்தையினைத் தவறி னேன் என்று தேவர்கள் புகன்றாலும் சரி, என் னோடு எதிர்த்து அப் பஞ்சவர் போர் தொடுத்தாலும் சரி, ஈ உட்காரும் இடம் கூட அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன்” என்று சிறிதும் இரக்கம் இன்றி இயம்பினன்.

கண்ணன் இந்தவாறான சினம் மிக்க வார்த்தை களைக் கேட்டு, “மன்னா, நாடு முழுமையினையும் கொடுக்க மனம் இல்லையாயின், பாதி நாட்டினை