பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நளன்

வீமராசன் என்பவன் விதர்ப்ப தேசத்து மன் னன், இந்த விதர்ப்ப தேச மன்னனாம் வீமராச னுக்குச் சிறந்த அழகு மிக்க பெண் ஒருத்தி பிறந்த னள். அவளே தமயந்தி என்னும் தையலாவாள். அவளது அழகு காரணமாகத் தேவர்களான இந் திரன், இயமன், அக்கினி, வருணன் ஆகிய நால் வரும் அவளை மணந்துகொள்ள பெரு விருப்பம் கொண்டிருந்தனர். என்றாலும், தமயந்தி நிட த தேசத்து மன்னனாம் நளனிடத்தில் தன் உள்ளத் தைப் பதியவைத்து அவனையே மணப்பது என்ற உறுதி கொண்டிருந்தாள். தமயந்தி பேர் அழகு வாய்ந்தவள் என்று முன்னர் அறிந்தோம். அப்படி யாயின் விண்ணவர்களே அன்றி, அவளை மண்ண வர்களும் மணக்க விரும்பினர் என்பதைக் கூறவும் வேண்டுமோ ?

ஆகவே, அவளைக் கடிமணம் புரியப் போட்டி மிகுந்துதான் இருந்தது. இதனை அறிந்த வீமராசன் இந்த வம்பு தனக்கு ஏன் என்று எண்ணி , அரச முறைப்படி சுயம்வரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதற்கு எல்லா மன்னரையும் மற்றுௗாரையும் மண ஓலை போக்கி வரவழைத்துக் கூட்டி, அப்போது யார்க்குத் தன் மகள் மணமாலை சூட்டுகின்றாளோ, அவனுக்கே அவளை மணம் முடித்து வைப்பது என்ற முடிவுக்கு வந்தனன், அதற்கு ஆவன செய்து