பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ளுதல் வேண்டும். தூதராகச் சென்று உரைப்பன வற்றை உரைக்கும் போது, தம் சுற்றத்தவர்க்கு யாதொரு தீதும் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். இவர்களது பேச்சுவன்மையால் எதிரி களும் தம் வயத்தராதல் வேண்டும். தூதர்கள், 'அன்புடையவர்களாகவும், பல நூல் களே ஆய்ந்த அறிவுடையவர்களாகவும், நல்ல குடி யில் வந்தவர்களாகவும், பேச்சில் நயம் வாய்ந்தவர்க ளாகவும், நல்ல உறவினரைப் பெற்றிருப்பவர்களாக வும், டல் கட்டும் அழகும் சொல்வன்மையுடைய வர்களாகவும் இருத்தல்வேண்டும்’ என்று பாரத வெண்பா கூறுவதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல் வன்மையும் ஆகிய இம்முப்பண்புகளும் மிக மிக இன்றியமையாதவை.ஆராய்ந்த சொல்வன்மை என் றதஞல், தூதுவர் நல்ல கல்விப் பயிற்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறது. தூது வர் எல்லா நூல்களேயும் கற்று வல்லார் முன், அந் நூல்களேத் தாமும் கற்று வல்லவராய்த் திகழ்தல் இன்றியமையாதது. நூலே நன்கு ஒதியவர்களைக் காட்டிலும், அந் நூல்களே ஓதி உணர்ந்தவர் முன், நூலின் திறனே வகுத்துக் கூறும் ஆற்றல் தூதுவர்க் குப் பெரிதும் வேண்டற்பாலது. அன்பு வேண்டும்; அறிவு வேண்டும்; ஆராய்ந்த படிப்பும் வேண்டும். இந்த மூன்றையும் பெற்றவரே தூதராகச் செல்லத் தக்க்வர் ஆவர். செய்திகளைப் பிறர் இடத்துக் கூறுங்காலத்துத் தொகுத்துச் சொல்ல வேண்டியவற்றைத் தொகுத்