பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை14

அக்காரிகை மணமாலை சூட்டிலள் எனில், அவள் அழகு பெற்றிருந்தும் பயனில்லை' என்று பகிரங்க. மாகப் பகர்ந்து விட்டனன். இயமன், “நான் சுயம் வரத்திற்குப் போவதில் பயனே இல்லை. நளனுக்கே அந்நங்கை மாலை சூட்டுவாள். ஆகவே, நான் திரும் பிப் போவதே அறிவுடைமை" என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறி விட்டனன். இவ்வாறு இந்திரன்,, வருணன், அக்கினி, இயமன், ஆகிய நால்வரும் நளனது அழகை வியந்து போற்றினர். தமயந்தி' யின் உளத்தையும் அறிந்து கூறினர்.

இங்ஙனம் தம் தம் உள்ளக் கிடக்கையினை ஒளி யாது உரைத்த நான்கு தேவர்களும் ஆசை வெட்கம் அறியாது' என்பதற்கு இணங்க, நளனை அணு. கினர். இந்திரன், நளனை நோக்கி, “நளமகாராசனே! உன் வரவு நல்வரவாகுக. நாங்கள் நல்ல வேளையில் புறப்பட்டதன் காரணத்தால்தான் உன்னை வழியில் கண்டனம். இவன் அக்கினிக் கடவுள், இவன் எம் தருமன். இவன் கடற் கடவுள். யானே தேவர்கள் : தலைவனான தேவேந்திரன். யாங்கள் நால்வரும்' உன்னை ஒன்று வேண்டப் போகிறோம். அதனைப் பின்னர்க் கூறுகிறோம் என்று கூறினன்.

நளன் அவர்களைத் தனித்தனியே வணங்கினான். **இவர்களோ தேவர் கள்; இவர்களுக்கு நம்மால் ஆகக் கூடியது என்ன இருக்கும்? மேலும், குறிப் பறிந்து ஈதலே சிறந்த கொடை. கேட்ட பின் கொடுத் தல் கேட்டு இல்லை என்று சொல்வதற்குச் சமமாகும். இத் தேவர்களின் உள்ளத்தில் இன்னது கேட்க.