பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை76

கூறியதும் நளனுக்குத் தன் எண்ணத்தில் இடி விழுந் ததுபோல் இருந்தது. என்றாலும், தான் எது கூறினா லும் செய்து முடிப்பதாக வாக்குத் தந்தமையின், அதனை மறுத்து விடுவதற்கு அஞ்சி அவ்வாறே செய்வதாக ஒவ்வினான்,

நளனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது ஓர் ஆண் மகன் மாதர்கள் வாழும் அந்தப்புரம் சென்று எப்படி. மீள்வது என்பதே அவ்வையும் ஆகும். ஆகவே, நளன் இந்திரனை நோக்கி, 'யான் எப்படி மீள்வது?' என்று வினவ, உடனே இந்தி ரன் 'நீ அந்தப்புரம் சென்று மீளும் வரை ஒருவர் கண்ணுக்கும் தோன்ற மாட்டாய். ஆனால், நீ மட் டும் ஆண்டுளார் யாவரையும் கண்ணுறுவாய். இத் தகைய மந்திர சக்தியினை உனக்கு நல்கியுள்ளேன்” நீ அச்சமின்றிச் செல்லலாம்' என்று கூறினன்.

அம் மந்திர வித்தையுடன் நளன் தமயந்தி வாழ் இடம் நோக்கிப் புறப்பட்டனர். இவ்வாறு : புறப்பட்டவன் தமயந்தியைச் சோலையிடத்தும் செய் குன்றுகளின் மீதும் காண இயலாதவனாகி, அவள் உறைவிடமாகிய கன்னி மாடத்தை அடைந்தனன். அங்கு அரம்பையர் சூழ, இந்திராணி அமர்ந் திருப்பது போலத் தோழியர் பலர் சூழ இடையே தமயந்தி வீற்றிருத்தலை நளன் கண்டனன்.

தமயந்தியின் உள்ளம் நளனையே நாடி. இருந் தது என்பது உண்மையாதலால், தமயந்தியின் துயரை நீக்கத் தோழியர் அடிக்கடி தமயந்தியை நோக்கி, 'அம்மணி வருந்தற்க. இதோ நள மகா ராசர் வந்து விட்டனர்' என்று தினமும் கூறி வந்