பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

99

சிலிர்த்தது; கண்கள் சிவக்தன. “மன்னுயிர்க்கு இன்னுயிராய், தன்னேரில்லாத் தலைவனாய், அனைவர்க்கும் அம்மையப்பராய் அமர்ந்த பரம்பொருளே அறுமுகப் பெருமான்; எங்கும் நிறைந்து இன்னருள் புரியும் அப்பெருமானுக்கு எங்கும் திருமுகங்கள்; எங்கும் திருவிழிகள்; எங்கும் திருச்செவிகள்; எங்கும் திருக்கரங்கள்; எங்கும் வீரக்கழல்புனைந்த திருவடிகள்; எங்கும் அவன் திருவுருவமே. இத்தகைய பேராற்றல் படைத்த பெருமான், வானவர் துயரைப் போக்கவும், அசுரக்களையை வேரறுத்து அறப்பயிரைக் காக்கவும் இங்கு எழுந்தருளியுள்ளான்; அப்பெருமான இழிந்த சொற்களால் இகழ்ந்துரைத்த உன் நாவை அப்போதே அறுத்திருப்பேன்; உன்னுயிரைபும் பிரித்திருப்பேன்; என் தலைவனாகிய வேலன் என்னை அதற்காக அனுப்பவில்லையாதலின் உன்னை உயிரோடு விடுகிறேன்; வேற்படைக்கு இரையாக இருப்பவனே! இன்னும் ஒரு நாள் உயிர் வாழ்ந்திரு; மீண்டும் ஒரு முறை உறுதி கூறுகின்றேன்; நீயும் நின் சுற்றமும் வாழ விரும்பினால் வானவரைச் சிறை வீடு செய்க! பகைமை யொழித்துப் பரம்பொருளாகிய முருகன் திருவடியைப் பணிக!” என்று அச்சூரனுக்கு நல்லுரை பகர்ந்தான்.

அசுரரை அழித்துச் செந்திலை அடைதல்

வீரவாகுவின் சீரிய உரைகள் சூரனது உள்ளத்தில் சினத்தையே விளைத்தன. ‘விரைவில் இவனைப் பிடித்துச் சிறையில் இடுக’ என்று அசுர வீரர்க்கு ஆணையிட்டான். அந்நிலையில் வீரவாகு ஆசனத்தைவிட்டு எழுந்தான். தன்னை வளைந்த அசுரர்