பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் விடுத்த தூதன்

105

இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்த புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரை கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தனர் என்பர். இங்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நலத்தை விளக்குவதாகும்.

மன்னன் அன்னத்தைக் கண்ணுறல்

இத்தகைய இனிமை வாய்ந்த நளவெண்பா நூலில் இரண்டு தூது நிகழ்ச்சிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அன்னத்தின் தூது. மற்றொன்று நளன் தூது. முதலில் அன்னத்தின் தூது பற்றிய செய்திகளை ஆய்ந்துணர்வோம். நிடத நாட்டின் தலைநகரமாகிய மாவிந்த நகரின் நடுவேயமைந்த மாளிகையைச் சூழ்ந்து மாமலர்ச் சோலை விளங்கியது. அரசனாகிய நளன் அச்சோலையிலுள்ள நன்மலர்களைக் கொய்தற்குத் தோழியர் பலர் புடை சூழ மெல்ல நடைபயின்று சென்றான். அச்சோலையின் நடுவண் அமைந்த பொய்கையில் பூத்த நறுமலர்த் தாமரையின்மேல் அன்னம் ஒன்று அமர்ந்திருத்தலைக் கண்டான். அதனைப் பிடித்துக்கொணருமாறு, அவன் தோழியரை ஏவினான். அவர்களும் அவ்வாறே அன்னத்தைப் பிடித்து மன்னன் திருமுன்னர்க் கொண்டு வந்து வைத்தனர். மன்னனைக் கண்ட அன்னம் மலங்கியது; தன் இனமான பிற அன்னங்களைக் காணாது கலங்கியது. அவ்வன்னத்திற்கு அரசன் ஆறுதல் கூறினான்.

அன்னம் சொன்ன அரிவை

நளன் கூறிய ஆறுதல் மொழியைக் கேட்டுத் தடுமாற்றம் தீர்ந்த அன்னம் அவனுக்கொரு நற் இ. தூ.-8