பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

இலக்கியத் தூதர்கள்

தமிழ்த்தெய்வ வணக்கத்தின் தனிச்சிறப்பு

மனோன்மணீய நூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடல் தனிப்பெருஞ் சிறப்புடையது. அது நூலாசிரியரின் சிறந்த மொழியாராய்ச்சித் திறனையும், தாய் மொழியாகிய தமிழின்பால் அவருக்கிருந்த அளவிறந்த பற்றினையும் தெளிவுற விளக்கும். ‘பரம்பொருளாகிய இறைவன் பல்லுயிரும் பலவுலகும் படைத்துக் காத்துத் துடைத்தாலும், தான் எந்த வேறுபாடும் அடையாது முன் இருந்தபடியே இருக்கிறான். அவ்வுண்மையைப் போன்றே, தமிழ்த்தாய் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிக் குழந்தைகளைப் பெற்றாலும் உலக வழக்கில் அழிந்தொழிந்து சிதையாத அருந்திறன் படைத்துள்ளாள். அத்தகைய தமிழ்த்தாயின் இளமைத் திறத்தை வியந்தும் செயல் மறந்தும் வாழ்த்துவோம்’ என்று தமிழ்த்தெய்வத்தை வாழ்த்தி வணங்கும் நூலாசிரியரின் தமிழுள்ளம் சாலச் சிறந்ததாகும். தமிழிலுள்ள இணையற்ற நூல்களாகிய திருக்குறள், திருவாசகம் என்னும் இரண்டனையும் அவர் பாராட்டுந் திறன் பலகாற் படித்து இன்புறத் தக்கதாகும்.

‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மதுவாதி யொருகுலத்துக் கொருநீதி?’
‘கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே.’
‘மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ?’

திருக்குறள், திருவாசகப் பெருமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறளைக் குற்றமறக் கற்றுணர்ந்த நல்லோர், ஒரு குலத்திற்கு ஒரு நீதி யோதும் மனுவாதி நூல்களை மனத்திற் கொள்ளு