பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் தூது

7

பார்த்திருப்பாள் என் மனையாள்; அன்னவளைக் கண்டு, மாறன் மதுரையில் ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலதுகொண்டு மேலது தழுவிப், பேழையுள்ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல் நயமிக்கதொன்றாகும்.

காவியங்களில் தூது

குணமாலை யென்னும் அணங்கு, சீவகன்பால் கிளியைத் தூது விடுத்த செய்தியினைச் சிந்தாமணிக் காப்பியத்திற் காணலாம். வாசவதத்தையின் பிரிவுத் துயருக்கு ஆற்றாது வையங் காவலனை உதயணன் மான் முதலியவற்றை நோக்கி விரித்துரைத்த கருத்துக்களைப் பெருங்கதை பேசுகிறது. நளனிடமிருந்து தூது சென்ற நல்லன்னம், தமயந்தியைக் கண்டு நளனின் நல்வியல்பெல்லாம் சொல்லி இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், மேகசந்தேசம் அம்ச சந்தேசம் போன்ற நூல்கள் உள்ளன.

தூதின் காரணம்

பிரிவால் வருந்தும் தலைவன் தலைவியர் அஃறிணைப் பொருள்களைத் தூது விடுத்தற்கு அவர்தம் உள்ளக் கலக்கமே உற்ற காரணமாகும். அப்பொருள்கள் தூது சென்று மீளவேண்டுமென்பது அவர்கள் கருத்தன்று, காம நோயால் துன்புறும் தம் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டுபண்ணவே தம் துயரைப் பலவாறு புலம்பி