பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இலக்கியத் தூதர்கள்

தூதோதும் திறம்

வேற்று வேந்தர்பால் தூதன் பேசவேண்டிய முறையினைப் பெருநாவலர் இரு பாக்களான் விளக்கியுள்ளார். அவரிடம் பல காரியங்களைக் கூற நேர்ந்த வழிக் காரண வகையால் தொகுத்துச் சொல்ல வேண்டும். அவர் விரும்பாத காரியங்களைக் கூற நேர்ந்த வழி வன்சொற்களை நீக்கி இன்சொற்களான் மனமகிழச் சொல்ல வேண்டும். தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்ல வேண்டும். அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாமல் காலத்திற்கேற்ப அது முடிக்கத் தக்க உபாயத்தை ஓர்ந்துணரவேண்டும். இத்தகைய சொல்வன்மையால் தன் அரசனுக்கு நன்மையை நாடி விளைப்பவனே நற்றூதனாவான்.

இடைத்தூதன் இயல்பு

இடைப்பட்ட தூதனாய கூறியது கூறுவான் இலக்கணத்தை வள்ளுவர் மூன்று பாக்களான் வகுத்துரைத்தார். அவனை வழியுரைப்பான், விடுமாற்றம் வேந்தர்க்குரைப்பான் என்னும் தொடர்களால் குறிப்பிட்டார். அன்னானுக்குத் தூய்மை, துணைமை, துணிவுடைமை, வாய்மை, வாய்சோரா வன்கண்மை, அஞ்சாமை எ ன் னு ம் இயல்புகள் அமைதல் வேண்டும் என்றார். பொருளாசையினாலோ சிற்றின்பத்தில் கொண்ட பற்று மிகுதியினாலோ வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மை வேண்டுவதாயிற்று. தூதன் தன் அரசனை உயர்த்துக்கூறிய வழி ‘எம்மனோர்க்கு அஃது இயல்பு’ எனக் கூறிப் பகை வேந்தன் வெகுளியை நீக்குதற் பொருட்டுத் தனக்கு