பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

21

கரைகடந்து பெருகியது. ‘முத்தும் முழு மணியும் ஒத்த திருவாரூர்ப் பெருமானை எத்தனை நாள் பிரிந்திருப்பேன்? ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என்னுடைய தோழனுமாய், யான் செய்யும் துரிசுகளுக்கெல்லாம் துணையிருந்து, மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை எத்தனை நாள் ஏழையேன் பிரிந்திருப்பேன்?’ என்று ஏங்கிப் புலம்பியவாறே திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார்.

கண்களையிழந்து பெறுதல்

அவர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்ட நாளில் மகிழடியில் அவருக்களித்த உறுதி மொழியை மறந்து பிரிந்த காரணத்தால் கண்ணொளி யிழந்து கலங்கினார். பிழுக்கை வாரியும் பால் கொள்ளும் பெற்றிமை போல் சிற்றடியேன் குற்றம் பொறுத்துக் குறை நீக்கியருள வேண்டுமென இறைவனை உள்ளங் கரைந்து கரைந்து, ஊனும் உயிரும் உருகத் தேனமுதத் திருப்பாட்டுக்களால் பரவிப் பணிந்து வேண்டினார். மூன்று கண்ணுடைய விண்ணவனே! அடியேன் இரு கண்களையும் பறிப்பது நினக்கு முறையானால் ஊன்று கோலேனும் உதவியருள்வாய் என்று வேண்டி, ஊன்றுகோலொன்றைப் பெற்று, அதன் துணை கொண்டு காஞ்சிமாநகரை அணுகினார். ஆங்குக் கச்சியேகம்பர் கருணையால் இடக்கண் பெற்றுத் திருவாரூரை யுற்றார். அவண் ஆரூர்த்தியாகன் அருளால் மற்றொரு கண்ணையும் பெற்று மகிழ்ந்தார்.

சுந்தார் விருப்பும் பரவையார் வெறுப்பும்

இழந்த கண்ணொளியினை இறைவனாகிய தோழரின் தண்ணருளால் இங்ஙனம் பெற்ற சுந்தரர், தம்