பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

27

சுந்தார் கொண்ட வெந்துயர்

இறைவன் இவ்வாறு இயம்பிய மொழி கேட்டுத் தோழர் துணுக்குற்றார், “நும் உரையையோ அடியாளான பரவை மறுப்பாள்? நாங்கள் யாருக்கு அடிமை யென்ற உண்மையை இன்று நீர் கன்று அறிவித்தீர்! அமரர்கள் உய்யவேண்டி ஆலத்தை உண்டருளினர்! திரிபுரத்தை அழித்து அவுணரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்! மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலாற் கடிந்து கருணை செய்தீர்! இன்று யான் உமக்கு மிகையானால் என் செய்வீரோ? நீர் என் அடிமையை இன்று விரும்பாவிடின் அன்று வலிய ஆட்கொண்டது எற்றுக்கு? என் துயரெல்லாம் நன்குகண்ட நீர் நங்கைபாற் சென்று அவள் சினம் தணித்து என்னை மனம் கொள்ளுமாறு செய்யீராகில் உயிர்விடுவேன்” என்று உரைத்துப் பெருமான் திருவடியில் விழுந்தார்.

மீண்டும் ஆண்டவன் தூது

நம்பியாரூரர் தளர்ந்து விழும் நிலைமையினை நம் பெருமான் கண்டருளினார். ‘நாம் மீண்டும் பரவைபால் சென்று வேண்டி நீ அவளை அடையுமாறு செய்வோம், துயர் நீங்குக’ என்று கூறித் திரும்பவும் புறப்பட்டார். அவர் அருளிய இன்சொல்லாகிய நல்லமுதம் தோழர்க்குப் புத்துயிர் நல்கியது. அடியவனைப் பயங்கெடுத்துப் பணி கொள்ளும் திறம் இஃதன்ருே!’ என்று போற்றிப் பணிந்தார். நம் பெருமான் பரவையார் மாளிகை நோக்கி கடந்தார்.

மாளிகையில் அதிசயம்

இஃது இங்ஙனமாகப் பரவையார் மாளிகையில் ஆதிசைவராகத் தூது வந்தவர் ஆரூர்ப் பெருமானே