பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இலக்கியத் தூதர்கள்

யென்னும் உண்மை புலனாகுமாறு அதிசயம் பல தோன்றின. அது கண்டு வியந்த பரவையார், “எம்பிரானே தம்பிரான் தோழர்க்குத் தூதராய் எழுந்தருளவும் அதனை அறியாது உரைமறுத்தேனே! ஐயோ! பாவியேன் என் செய்தேன்?” என்று ஏங்கியவராய் வாயிலில் வந்து நின்று பாங்கியரோடு கலங்கினார்.

மாளிகை-கயிலை மாமலை

அவ்வேளையில் கொன்றை வேணியார், தம்மை பறியும் செம்மைக் கோலமுடன் தேவரும் முனிவரும் பூத நாதரும் புடைசூழ வந்து, பரவையார் மாளிகை புட் புகுந்தார். இவ்வாறு,

‘பேரரு ளாளர் எய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சிர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே

என்று பாராட்டிணார் சேக்கிழார். பரவையார் திரு மாளிகை கயிலைத் திருமலையெனக் காட்சியளிக்கப் பெருமானை எதிர்கொண்டு வரவேற்ற பரவையார் மெய்யுறு நடுக்கத்தோடும் மிக்கெழும் மகிழ்ச்சியோடும் அவர் அடியிணையில் விழுந்து பணிந்தார்.

பாவையார் பணிவுரை

அப்போது தூதராய் வந்த பெருமான், “நம்பியாரூரன் உரிமையோடு என்னை மீளவும் ஏவியதனால் உன்பால் வந்தோம்; நீ முன்புபோல் மறுக்காமல் அன்புடன் நின்பால் அவன் வருதற்கு இசைதல் வேண்டும்” என்று வேண்டியருளினார். ஆரூர்ப் பெருமான் அருள்மொழி கேட்ட பரவையார் விழிநீர் பொழியத் தொழுது விண்ணப்பம் செய்தார்.