பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பிரிந்தும் மாறுபட்டும் உள்ள இருவரை வேறொருவர் ஒன்றாகச் சேர்த்து வைக்க முயலும் முயற்சியே தூது. பிரிந்திருக்கும் தலைவன் தலைவியருள் ஒருவரிடம் மற்றொருவர் அன்பு காரணமாக அனுப்பும் தூது அகத்துறைத் தூதின்பாற்படும். பகை காரணமாகப் பிரிந்திருக்கும் மன்னர் இருவர் பாலும் செல்லும் தூது புறத்துறைத் தூது எனப்படும். இவ்வாறு அன்பைத் தெரிவிப்பதற்காகவும் பகை தீர்ப்பதறகாகவும் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவை பல்வேறு இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துத்தொகுத்து இலக்கியச் சுவை வெளிப்பட இயற்றப் பட்டதே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இந்நூல். அன்னப் பறவையிலிருந்து ஆண்டவன் வரை எல்லோருமே சிலசில சமயங்களில் தூதராகச் சென்று தொண்டாற்றியுள்ளனர்.

சமயக்குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரருக்காகப் பாவை நாச்சியாரிடம் சிவபெருமானே தூது செல்கின்றார். செங்கோலேந்தும் இருவரிடைத் தூது செல்கின்றார் குழலூதும் கண்ணன். அருந்தமிழ்ப் பாட்டியாராய ஒளவை மூதாட்டியாரே அதியமானின் தூதராகத் தொண்டைமானிடம் செல்கிறார். மறைவழிகாட்டும் மாமுது பார்ப்பான் மாதவிக்காகக் கோவலன்பால் தூது செல்கின்றான். இலங்கை வேந்தன் இராவணனிடம் இராமபிரானின் தூதனாகச் செல்கிறான் அனுமன். இவர்களைப்