பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதியமான் அனுப்பிய தூதர்

39

அச்சுறுத்திப் பணிய வைத்தல் தகாது ; ஆதலின் அவரைப் போரில் வீறுடன் எதிர்த்தே வெல்லுவேன் என்று அவன் வெகுண்டுரைப்பான். அவன் அவ்வாறு வெகுண்ட போதும் ஒளவையார் அவனுக்கு அறிவுரை கூற அஞ்சுவதில்லை. நாட்டின் அமைதியையும் மக்கள் நலனையுமே பெரிதாகக் கருதிய பெருமாட்டி யாருக்கு அவனது வெகுளி சிறிதும் வேதனையை விளக்கவில்லை. இங்ஙனம் அதியமானுக்கும் அவன் பகைவர்க்கும் அறிவுரை கூறி நாட்டின் அமைதியைக் காப்பதில் நாட்டத்தைச் செலுத்தினார்.

தொண்டைமானிடத்துத் தூது போதல்

அந்நாளில் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை யாண்ட மன்னன் தொண்டைமான் என்பான். அவன் அதியமானிடத்துப் பகைமை கொண்டு போருக்குப் படை திரட்டினான். அவன் தன்பால் படைவலி மிக்கிருப்பதாக எண்ணிச் செருக்குற்றான். அவனது அறியாமையைத் தெரிந்த அதியமான், போரின் கொடுமையையும், தன்னை எதிர்த்தால் அவன் வலியிழந்து அழிவது உறுதியென்பதையும், அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் நேரும் கேட்டையும் தெளிந்துகொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்த நினைந்தான். அவன்பால் தூது சென்று அச்செயலைச் செம்மையாகச் செய்து வருதற்குத் தகுதியுடையார் ஒளவையாரே என்று எண்ணினான். அவ்வாறே தன் கருத்தை அவர்பால் தெரிவித்து அவரைத் தொண்டைமானிடத்துத் தூது விடுத்தான். அயல்நாட்டு அரசன் ஒருவன்பால் பெண்ணொருத்தி தூதுசென்று ஓதினாள்