பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

59

கூறுதல், ஓர் அன்பன் தன் நண்பனுக்குக் கூறுவதனையொக்கும். அதனைக் காவியம் கூறுதல், காதலியொருத்தி தன் இனிய காதல் தலைவனுக்குக் கூறுவதை யொக்கும். இம்மூவகை முறையுள் இறுதியிற் கூறப்பட்டதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இலகுவது கம்பராமாயணமாகும்.

கம்பன் காவிய அமைப்பு

சங்கத்துச் சான்றோர் பாக்களுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி முதலிய செந்தமிழ்க் காவியங்கள் தோன்றின. இவை கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுட்களாதலேயன்றிப் பாநலம் பழுத்துப் பயில்வார்க்கு இன்பஞ் செய்யும் இன்சுவையு முடையன ஆதலின் அறிவுடையோரால் மிக விரும்பிக் கற்கத்தகும் மாண்புடையனவாகும். இவற்றுள் சிந்தாமணிக் காவிய நடையினை மேற்கொண்டு, திருக்குறள் தமிழ் மறையின் அரிய கருத்துக்களில் தோய்ந்து, இனிய ஓசை நயந் தோன்றப் பிற்காலத்தில் எழுந்த அரிய கதைச் செய்யுள் நூல் கம்பராமாயணமே ஆகும்.

காவியச் சிறப்பு

ஒரு சிறந்த இலக்கியத்தை அஃது எழுந்த காலத்துவாழ்ந்துவந்த மக்களுடைய வாழ்க்கை ஓவியமாகவும், அம்மக்களின் அரிய பண்பாட்டைத் தன்னுட் கொண்டு காட்டும் கண்ணாடியாகவும் கற்றோர் போற்றுவர். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கம்பராமாயணமோ இனிமை, எளிமை, ஆழம் ஆகிய மூன்று குணங்களையும் கொண்ட தண்டமிழ்ச் செய்யுள் நடையான் இயன்றது. இது மக்க