பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

69

சூளாமணி பெறுதலும் சூழ்ச்சி புரிதலும்

பின்னர்ச் சீதை, அனுமன் தன்னைக் கண்டு பேசியதற்கு அடையாளமாகத் தன்பால் இருந்த சூளாமணி யென்னும் அணிகலத்தை அவனிடம் நல்கினாள். அதனைத் தொழுது வாங்கிய அனுமன் தன் ஆடை யிலே முடிந்து பாதுகாப்புச் செய்து கொண்டான். பிறகு, பிராட்டியிடம் விடைபெற்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தான். சிறிது நேரத்தில் அவனது எண்ணம் மாறியது. நான் சீதாபிராட்டியைக் கண்டு பேசிய சிறுசெயலை மட்டும் முடித்துத் திரும்புதல் என் பெருமைக்கு இழுக்காகும். இங்குள்ள அரக்கர்களை யழித்துச் சீதாபிராட்டியை மீட்டுச் சென்று, இராமபிரான் திருவடிகளில் சேர்க்காமல் இருந்தால் நான் இராமபிரானுக்கு அடியவனாவது எங்ஙணம் ? ஆதலின் நான் இப்பொழுது செய்ய வேண்டுவது, இங்குள்ள அரக்கர்களைத் துன்புறுத்தி எனது ஆண்மையினைக் காட்ட வேண்டியதேயாகும். ஆகவே இவ்வரக்கர்களைப் போருக்கு இழுப்பதற்கு யாது செய்யலாம் ?’ என்ற எண்ணமிட்டான். அசோக வனத்தை யழிப்பதே தக்கது என்று நினைந்தான்.

அசோக வனமும் அரக்கர் இனமும் அழித்தல்

இவ்வாறு அரக்கர்களைப் போருக்கிழுக்க எண்ணிய அனுமன் பேருருவங் கொண்டான். தன் கால்களால் அவ்வனத்தை மிதித்துத் துவைத்துச் சிதைத்தழித்தான். ஆங்கிருந்த உயர்ந்த செய்குன்று ஒன்றனையும் தூக்கி இலங்கை நகரத்தின்மீது வீசினான். இதனால் அஞ்சியோடிய அரக்கர்கள், இராவணன் இருக்கும் இடத்தையடைந்து முறையிட்டனர். இத்தனையும் ஒரு குரங்கின் செயல் என்று கூறக்கேட்ட இராவ