பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இலக்கியத் தூதர்கள்

அனுமனைக் கண்ட இராமன்

இராமபிரானுக்குச் செய்தி கூறும் பொருட்டு எல்லோரும் புறப்பட்டனர். அனைவர்க்கும் முன்னே அனுமன் விரைந்து சென்றான். இராமபிரான் சுக்கிரீவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். சிறிது போழ்தில் அனுமன் இராமபிரான் இருக்கும் இடத்தையடைந்தான். அவன் அங்கு இராமபிரானை வணங்கவில்லை. சீதை இருக்கும் திக்கை கோக்கி வணங்கி வாழ்த்தினான். குறிப்பறிவதில் வல்ல இராமபிரான் அனுமனது செயலை உற்று நோக்கினன். சீதை நலமாக உள்ளாள் ; இவ்வனுமன் அவளைப் பார்த்துவிட்டு வந்துள்ளான் அவளுடைய கற்பும் கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான். அவனுக்கு உற்ற துயர் நீங்கியது; உவகையால் தோள்கள் பூரித்தன.

சொல்லின் செல்வனாய அனுமன் உரை

இவ்வேளையில் அனுமன் இராமனை நோக்கி, “தேவர்கள் தலைவனே! கண்டேன் கற்பினுக்கணியாம் சீதாபிராட்டியை இலங்கையிலே; இனி நீவிர் ஐயமும் துயரும் அறவே நீக்குவீர்! என் பெருந்தெய்வம் போல் திகழும் அவர், நும் பெருந்தேவியென்னும் தகுதிக்கும், நும்மைப் பெற்ற தசரத மன்னரின் மருமகள் என்னும் வாய்மைக்கும், சனக மன்னரின் மகள் என்னும் தகைமைக்கும் ஏற்பச் சிறப்புடன் விளங்குகின்றார் ; வில்லில் வல்ல வீரனே நான் இலங்கைமாநகரில் சீதா பிராட்டியாரைக் காணவில்லை; ஆனால், உயர்குடிப் பிறப்பும் பொறுமையும் கற்பும் ஒரு பெண்ணுருவம் கொண்டு களிநடம் புரிதலைக் கண்டேன்; நீர் அப்பிராட்டியின் கண்ணிலும்