பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

இலக்கியத் தூதர்கள்

ஆண்டுகள் கழிந்ததும் பாண்டவர் ஐவரும் வெளிப்பட்டனர். தமக்குரிய தாயபாகத்தைத் தருமாறு வேண்டி முதலில் உலூக முனிவரையும், பின்னர்க் கண்ணபிரானையும் துரியோதனன்பால் தூது அனுப்பினர்.

கண்ணனைத் தூது செல்ல வேண்டுதல்

துரியோதனன் விடுத்த தூதனாய்ப் பாண்டவர் உறைவிடம் அடைந்த சஞ்சய முனிவன், நுமக்கு இனித் தவம் செய்வதே தக்கதென உரைத்து அகன்றான். அவன் சென்ற பிறகு, பாண்டவர் தலைவனாகிய தருமன் அரசர்க்குரிய அறநெறியை ஆராய்ந்தான். துரியோதனன்பால் கண்ணபிரானைத் தூதனுப்பி, இன்னும் ஒரு முறை அவன் எண்ணத்தைத் திண்ணமாகத் தெரியலாம் என்று எண்ணினான். பின்னர்க் கண்ணபிரானிடம், “நீ தூதாகச் சென்று எம்முடைய எண்ணத்தை அத் துரியோதனாதியர்க்குச் சொல் , அவர்கள் எமக்குரிய பங்கைக் கொடுப்பதற்கு மறுப்பராயின் போர் புரிந்தேனும் நாட்டைக் கைப்பற்றுவோம் ; நீ முதலில் எமக்குரிய பாகத்தைக் கேள் , அதனைத் தருதற்குத் துரியோதனன் மறுப்பானாயின் எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களேனும் கேள்; அவன் அதனையும் மறுப்பானாயின் ஐவர்க்கும் ஐந்து இல்லங்களையேனும் கேள் ; அதனையும் அளிக்க மறுப்பானாயின் போருக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தி வருக ” என்று வேண்டினான்.

கண்ணன் அத்தினாபுரம் அடைதல்

பாண்டவர் தலைவனாகிய தருமன் வேண்டுகோளுக்கு இசைந்த கண்ணபிரான் அத்தினாபுரத்தை