பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கியத் தூதர்கள்


1. தமிழில் தூது

தமிழில் சிறு நூல்கள்

ஆயுந்தொறுந் தொறும் இன்பந் தரும் மொழியாகிய நந்தம் செந்தமிழ் மொழியில் நவில்தொறும் நயந்தரும் சிறு நூல்கள் எண்ணிறந்தன உள. அவை பல்வேறு வகையினவாய் அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்து வகுத்த நம் முன்னோர் ‘தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்’ என்று அறுதியிட்டனர். ஆனால் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சிற்றிலக்கியங்களும் இக்நாளில் வழங்குகின்றன.

தொல்காப்பியர் சொல்லும் விருந்து

பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழந்தமிழ இலக்கணமாகிய தொல்காப்பியம் சிற்றிலக்கியங்கட்கெல்லாம் அடிப்படையான ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இக் நாளிற் போலப் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் வழக்காற்றில் இருந்திலவேனும் காலப்போக்கில் அவை தோன்றுதற்குரிய விதியை அவர் வகுத்துள்ளார். அஃது அவர் எதிர் காலத்தை நுனித்து நோக்கும் பழுத்த மதிநலத்தைப் புலப்படுத்துவதாகும். தொடர்நிலைச் செய்யுட்கு உரியனவாக உரைக்கப்பெற்ற