பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இலக்கியத் தூதர்கள்

கொண்டு எதிர்த்தால் சிங்கங்கள் வாளாவிருக்குமோ? போருக்கு உடன்பட்டுக் கையறைய வேண்டும் என்று நீ கூறியது தகுமா? என்று சினந்தான். பாண்டவர்களைப் பலவாறு இகழ்ந்து பேசினான். அவன் பழித்துரைத்த மொழிகளையெல்லாம் கண்ணன் பொறுமையுடன் கேட்டான். பின்பு அந்த அவையினின்று நீங்கி விதுரன் மாளிகையை அடைந்தான். இனிமேல் பாண்டவர் எண்ணம் இனிது நிறைவேறும் என்று நினைந்து மகிழ்ந்தான்.

விதுரனை இகழ்தலும் வில்லை முறித்தலும்

கண்ணபிரான் அரசவையின் நீங்கிய பின்னர்த் துரியோதனன் கண்ணபிரானுக்கு விருந்தாட்டியதற்காக விதுரன்மீது சினங்கொண்டான். ‘விலைமகள் மகனாகிய விதுரன் இன்று கண்ணனுடன் உறவு கொண்டதாகிய வியப்பை என்சொல்லி வெறுப்பது?’ என்று கூறி அவனை இகழ்ந்தான். நாவைக் காவாமல் துரியோதனன் நவின்ற மொழிகள் விதுரனுக்குப் பெருஞ்சினத்தை விளைத்தன. ‘என்னை விலைமகளின் மகன் என்று இகழ்ந்துரைத்த உன் பக்கத்தில் துணையாக நின்று வில்லைத் தொடேன்’ என்று விதுரன் வஞ்சினம் கூறித் தன் வில்லை முறித்து இல்லம் நோக்கி விரைந்தான். அது கண்ட வீடுமர் துரியோதனனைக் கடிந்துரைத்தார். அவனோ வீடுமர் மொழிகளையும் பொருட்படுத்தாது, கன்னன் வில்லாண்மையையே வியந்து பேசினான்.

விதுரன் கண்ணனுக்கு விளம்பியன

விதுரன் வில்லை முறித்து விரைந்து வருதலைக் கண்ட கண்ணன், அதனை முறித்தற்குக் காரணம்