பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

89

அடைத்து வருவார். மறுகாட் காலையில் திருக்கதவம் திறக்கும் பொழுது, அவர் வைத்துவந்த சுவடிகளில் திருத்தங்கள் செய்யப்பெற்றிருக்கும். அத் திருத்தங்களை முருகப் பெருமானே செய்தருளினான் என்று காது வழிச் செய்தியொன்று வழங்கி வருகின்றது. ஆதலால், தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமான் திருக்கரத்தால் திருத்தம் செய்யப்பெற்ற தெய்வச் சைவத் திருநூலாகத் திகழ்வது கந்த புராணம் ஆகும்.

வீரசோழிய விதிக்கு இலக்கியம்

இத்தகைய கந்த புராணத்தை நூலாசிரியராகிய கச்சியப்பர் தாம் வழிபடும் காஞ்சிக் குமரகோட்டத்தில் அரங்கேற்றத் தொடங்கினர். அப்போது இந் நூலின் முதற் பாடலில் ‘திகழ் தசக்கரம்’ என்பது ‘திகடசக்கரம்’ என ஆனதற்கு இலக்கண விதி கூறுமாறு அவையிலிருந்தோர் வினவினர். அவ்வேளையில் ஒருவர் அங்கு விரைந்து வந்து, வீரசோழியம் என்னும் நூலிலுள்ள விதியை எடுத்துக்காட்டி, அவையோர் வியக்குமாறு விடைகூறி மறைந்தனர். அவ்வாறு வந்தவர் முருகப் பெருமானே என்று அறிந்து, கச்சியப்பரின் கவித்திறனப் பலவாறு மெச்சினர்.

நூலின் உயர்வும் உட்பொருளும்

முருகப்பெருமான் திருவருள் நலங்கனிந்த தெய்வ நூலாகிய கந்த புராணம் வீறுபெற்ற செந்தமிழ் நடையுடையது. உவமை நலஞ்செறிந்த எளிய இனிய செய்யுட்களால் இயன்றது. அணிகள் பலவும் அமைந்து சிறந்த காவியமாகத் திகழ்வது. பதினாயிரத்துக்கு மேற்பட்ட பைந்தமிழ்ப் பாக்களைக் கொண்டது. சிறந்ததோர் உட்பொருளைத் தன்

இ.துா-7