பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாமப் போய் வீட்லே உட்கார்ந்து வேலையைப் பார்க்கலாம் . கல்கி இவ்வளவு பேசவில்லை. ஆனால், சற்றுக் கோபம் வந்திருக்க வேண்டும். கையைக் காட்டி போ' என்று ஒரே எழுத்தில் அனுப்பிவிட்டிருக்கிறார். சதாசிவம் அவர்கள் அழைத்துப் பேசியும் கேளாமல், வேலையை உதறி விட்டுப் or போய் அங்கே ஒரு நாள் தான் இருக்க வரதராஜன் முடிந்தது. சில நாள்களிலேயே இயக்குநர் ኧ ராமண்ணா, அப்பாவை வரச் சொல்லி வேலை தந்திருக்கிறார். 'விந்தன் திரைக் கதை வசனம் எழுதிய முதல் படம்தான் ராமண்ணாவின் வாழப் பிறந்தவள். தன்னை 'இனம் கண்டு கொண்டு எழுத்துலகில் வாய்ப்பளித்த பேராசிரியர் கல்கியின் பிரபல வரலாற்று நாவலான 'பார்த்திபன் கனவு திரைப்படமானபோது அதற்கு வசனம் எழுதுகிற பேறும் அப்பாவுக்குக் கிடைத்தது. அத்துடன் அதில் இடம் பெற்ற இதய வானில் உதய நிலவே! எங்கே போகிறாய்?" என்ற இனிமையான பாடலையும் எழுதினார் அப்பா. ஜனார்த்தனம் குலேபகாவலி படத்தில் வரும் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, கூண்டுக்கிளியில் வரும் கொஞ்சும் கிளியான பெண்ணை போன்ற சிரஞ்சீவிப் பாடல்களை எழுதியதும் அப்பாதான். பத்துப் பாடல்களுக்குள்தான் அப்பா எழுதியது. இருப்பினும் பெயர் தந்த பாடல்கள் அவை. அதே போல் கதை வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கையும் ஏழு தான்! திரைப்படத்துறைத் தொடர்பு அப்பாவுக்கு சரிப்பட்டு வரவில்லை. எப்படியோ பத்தாண்டுக் காலம் அதில் உழன்றார். அவரிடம் ஒர் ஒழுங்கு இருந்தது. எங்கும் வெளியில் உணவு அருந்தவே மாட்டார். நண்பகல் ஒரு மணிக்கு எப்படியும் வீட்டுக்கு வந்து விடுவார். அதே போல் இரவு ஏழு மணியானால் கண்டிப்பாக வீட்டில்தான். இருப்பார். திரைப்படத்துறை சம் பந்தப்பட்ட எந்த விருந்திலும் அப்பா கலந்து கொண்டதில்லை. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 - 7